Friday, June 24, 2016

Drumstick முருங்கை

முருங்கைக் காயை' யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது, குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள். காரணம், பாக்யராஜ் ஏற்படுத்தி வைத்துள்ள இமேஜ் அப்படி. ஆனால் அதிலும் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. முருங்கைக் காயில் 'பவர்' இருக்கிறதாம். 'அது' மட்டுமல்ல, வேறு சில சக்திகளும் கூடவே உள்ளன.
வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் ஆரோக்கியத்திற்கு குறைவு இருக்காது. இதனால் முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைத்தனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். இலைகள், வேர், கனி மற்றும் விதை எண்ணெய் என முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை. முருங்கை மரம் இலை, பூ, காய்களுக்காக இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை. மொரிங்கஜின், மொரிங்ஜின்னைன், பேரேனால், இண்டோல் அசிடிக் அமிலம், டெர்கோஸ், பெர்மைன், கரோட்டின், குர்சிடின் ஆகியவை காணப்படுகின்றன.
முருங்கை இலை
முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமடையும். மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.
இலையின் சாறு விக்கல் போக்கும். அதிக அளவில் வாந்தி தூண்டும். சமைத்த இலைகள் சத்துள்ளவை. ஃபுளு காய்ச்சல் மற்றும் சளி போக்கும். கண் நோய்களுக்கு சாறுடன் தேன் கலந்து இமையில் தடவப்படுகிறது. கழலை வீக்கங்களுக்கு இலைப்பசை பற்றாக கட்டப்படுகிறது.
பெண்களுக்கு வலி நிவாரணி
பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி. தாய்ப்பாலை ஊறவைக்கும். வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வயிற்றுப்புண்ணை ஆற்றும். அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்ற வற்றைப் போக்கும்.
உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்து, பார்வை நரம்புகள் வலுப் பெறும். பித்தத்தைக் குறைக்கும். இளநரையைப் போக்கும். சருமத்தைப் பளபளக்கச் செய்யும். முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
முருங்கைப் பூ
நாவின் சுவை யின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும். முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
இயற்கையின் வயகரா
முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம். அதுபோல் முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.
நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும். மலர்கள் சிறுநீர்ப் போக்கினைத் தூண்டுபவை. பித்தநீர் சுரப்பினை அதிகரிக்கும். செயலியல் நிகழ்வுகளைத் தூண்டும்.
முருங்கைப் பிஞ்சு
முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.
முருங்கைக் காய்
அனைவரும் விரும்பிச் சாப்பிடும் காய் முருங்கைக் காய். அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்டது. உணவில் சுவையை அதிகரிக்கக் கூடியது. மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். மூல நோய்க்கு சிறந்த மருந்தாகும். சளியைப் போக்கும். காய்கள் காய்ச்சலுக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானவை. வேரின் சாறு பாலுடன் கலந்து சிறுநீர்ப் போக்கு தூண்டுவிடும்
ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணையங்களின் வீக்கம், ஆகியவற்றை போக்க வல்லது. வேரின் கசாயம் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை புண் ஆற்றுகிறது.
விதை எண்ணெய்
இதன் விதையில் இருந்து பயோ டீசல் எடுக்கலாம், சமையல் எண்ணெய் எடுக்கலாம். மேலும் மேனி எழிலுக்கு , சுகதாரத்திற்கு ,இயந்திரத்திற்கு மசக்கு எண்ணெய் , உள்ளிட்ட பல வித பயன்களை தருகிறது விதை எண்ணெய். விதையின் எண்ணெயுடன் சமஅளவில் வேர்க்கடலை எண்ணெய் சேர்த்து மூட்டு வலிக்கு மருந்தாகிறது. நல்ல எண்ணெயுடன், சேர்த்து காதுவலிக்கு தரப்படுகிறது.
முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும், உடல் வலுப்பெறும். உடல் சூடு தணியும்.
இலைக்காம்பு
சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள். ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது. முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும். தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும். வறட்டு இருமல் நீங்கும். இரு பாலாருக்கும் நல்ல உடல் வலிமையைத் தரக்கூடியது.
முருங்கைப் பட்டை
முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும். பட்டையின் சாறுடன் வெல்லப்பாகு கலந்து தலைவலிக்கு மருந்தாக உட்கொள்ளப்படுகிறது.
முருங்கை வேர்
வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல், இரைப்பு, முதுகுவலி நீங்கும். வேர், பட்டை, மற்றும் மரப்பிசின் கருச்சிதைவு விளைவிக்கக்கூடியது. முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும். சிறுநீரைத் தெளிய வைக்கும்.
சத்து நிறைந்த முருங்கை
ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் சி அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.

Thats life..........

ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். 
அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.
அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.
.
இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார்.
அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..!
.
இறந்தவரின் மனைவி சொன்னாள்..
”குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..? 
நான் என்ன செய்வேன்..? அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்..!” என்றார்..!
.
குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார்.. ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை...
.
கடைசியில் அவர் கேட்டார்
”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்”
தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.
பின் சொன்னார்..
”இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம்.
இறந்தவர் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!” என்றார்..!
.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை. 
அவர் இறந்தவரின் தந்தையைக் கேட்டார்” 
ஐயா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா.?”
.
தந்தை சொன்னார்
”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு.?அவளுக்காக நான் வாழ வேண்டும்”
.
தாயைக் கேட்க அவள் சொன்னாள்
”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது.?”
.
மனைவி சொன்னாள்
”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது.? அவனுக்காக நான் வாழ வேண்டும்”
.
குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்
”குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா.?”
.
அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள் 
”குருஜி, உங்களுக்கென்ன பைத்தியமா.?அவன் ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா.?”
.
குருஜி சொன்னார்
”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
அப்படியானால் இவருக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் . இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..!
”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்”
“பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!”.
எனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்.


Drinking man comedy......

இரண்டு சின்ன பசங்க ஒரு கூடை நிறைய ஆரஞ்சு பழங்களை எடுத்து கிட்டு ஓடி வந்தாங்க
ஒரு அமைதியான இடத்துக்கு போய் இரண்டு
பேரும் பழங்களை பங்கு போட நினைச்சாங்க
பக்கத்திலே உள்ள சுடுகாட்டுக்கு போவோம்னு ஒருத்தன் சொன்னான்
சுடுகாட்டின் கேட் பூட்டி இருந்துச்சு கேட்
மேலே ஏறி குதிக்கும் போது இரண்டு
ஆரஞ்சு பழங்கள் தவறி விழுந்துடத்து
கூடை நிறைய பழங்கள் இருந்ததுனாலே
அத அவங்க கண்டுக்கல
கொஞ்ச நேரம் கழிச்சு சுடுகாடு வழியா ஒரு குடிகாரன் வந்தான்
அவன் உள்ளே வந்த சத்தத்தை கேட்டுட்டு
அங்கேயே நின்னுட்டான்
உனக்கொன்னு, எனக்கொன்னு உனக்கொன்னு ,எனக்கொன்னு
இதை கேட்ட அவனுக்கு போதை இறங்கிட்டது
அடிச்சு பிரண்டு பக்கத்திலே உள்ள சாமியார்
கிட்ட ஓடி போய் சொன்னான்
தயவு செய்து என் கூட வாங்க கடவுளும், சாத்தானும் சுடுகாட்டுல உள்ள பிணங்களை
பங்கு போடுரதை காமிக்கிறேன்
சாமியாருக்கு ஒன்னும் புரியலை ஆனாலும்
அவன் வருந்தி கூப்பிட்டதாலேஅவன் கூட
போனாரு.
சுடுகாட்டுலிருந்து சத்தம் வந்துச்சு
"உனக்கொன்னு,எனக்கொன்னு
உனக்கொன்னு,எனக்கொன்னு"
திடீர்னு சத்தம் நின்னுட்டது
ஒரு சத்தம் தெளிவா கேட்டுச்சு
ஆமா!!!!!!!!!!!!
கேட்டுல இருக்கிற ரெண்டு யாருக்கு.....?
நாங்க இன்னும் சாகல,நாங்க இன்னும் சாகலனு சொல்லி கிட்டு சாமியாரும்,
குடிகாரனும் விழுந்தடிச்சு ஓடினாங்க
இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள் !!

A Good Friend.....


"உண்மையான நண்பன் "
😨😨😨😨😨😨😨😨😨😨
நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்த கப்பல் நடுக் கடலில் கவிழ்ந்ததில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்து ஒரு தீவில் ஒதுங்கினார்கள். அங்கே மனித நடமாட்டமே இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை. உண்ண உணவு எதுவும் இல்லை. ஒதுங்க ஒரு நல்ல இடம் இல்லை. கடுமையாக அலைந்து ஒன்றும் பயனில்லாது போகவே இருவரும் பிரார்த்தனை செய்தனர்.
ஒருவன் கடவுளிடம் வெகு நேரம் பிரார்த்தனை செய்தான். மற்றொருவனோ ஒரே நிமிடத்தில் தனது பிரார்த்தனையை முடித்துக் கொண்டான். பிரார்த்தனை முடிந்து அவர்கள் சிறிது தூரம் நடந்த போது அங்கே ஒரு நீரூற்று தென்பட்டது. தாகம் தீர அதில் அவர்கள் தண்ணீர் பருகினார்கள்.
இப்போது பசி வந்து காதை அடைத்தது. மீண்டும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்கள். இப்போதும் ஒருவன் மட்டும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்ய மற்றவன் ஒரே நிமிடத்தில் முடித்துக் கொண்டான். சிறிது தூரம் சென்றதும் ஒரு பழ மரத்தைக் கண்டு ஆவலுடன் பழங்களைத் தின்று பசியாறினார்கள்.
அந்தத் தீவில் வாழ வழி இல்லை என்பதை உணர்ந்து மறுபடியும் அந்தத் தீவிலிருந்து வெளியேறி ஊர் போய்ச் சேர வேண்டும் என்று இருவரும் இறைவனைப் பிரார்த்தித்தார்கள். வழக்கம் போல ஒருவன் மட்டும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்ய மற்றவன் ஒரு நிமிடத்தில் முடித்துக் கொண்டான். என்ன ஆச்சரியம். அப்போது அத்தீவின் பக்கம் ஒரு கப்பல் வந்தது. இவர்கள் கூச்சல் போட்டதும் கப்பலில் இருந்தவர்கள் இவர்களைக் கவனித்து, வந்து இருவரையும் கப்பலுக்கு அழைத்துச் சென்றார்கள்.
அப்போது நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தவனின் மனதில் ஒரு வஞ்சக எண்ணம் உருவானது. அவன் மற்றவன் கப்பலில் ஏற கூடாது என்று தடுத்தான். ஏன் என்று அனைவரும் கேட்க அவன் சொன்னான், ''ஒவ்வொரு முறையும் நான் நீண்ட நேரம் வேண்டி உருகிக் கடவுளை வழிபட்டு ஒவ்வொன்றையும் அடைந்தேன். இவனோ பேருக்குப் பிரார்த்தனை செய்தவன். இவனுக்கு இந்த பலனை அடையத் தகுதியில்லை,
''அப்போது வானிலிருந்து ஒரு அசரீரி கேட்டது, ''மூடனே, உன்னால் தான் எல்லாம் நடந்தது என்று நீ நினைக்கிறாய். ஆனால் உண்மையில் உன் நண்பனின் பிரார்த்தனைக்குத் தான் எல்லாமே கிடைத்தது. ஒரு நிமிடம் தான் வேண்டினாலும் அவன் என்ன வேண்டினான் தெரியுமா?' கடவுளே,என் நண்பன் கேட்கும் உதவிகளை எல்லாம் செய்து கொடுங்கள்,' என்பது தான்.
அவனுடைய உண்மையான பிரார்த்தனைக்கு செவி சாய்த்துத் தான் நான் எல்லா உதவிகளையும் செய்தேன், ''முதலாமவன் வெட்கித் தலை குனிந்து தன் நண்பனிடம் மன்னிப்புக் கோரினான். பின் கடவுளுக்கு நன்றி கூறி நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தான். மற்றவன் வழக்கம் போல ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்து விட்டு தன் வேலையைப் பார்க்கப்போனான்.
😨😨😨😨😨😨😨😨😨😨
நல்லதே நடக்கும் 
வாழ்க வளமுடன்