Monday, October 26, 2015

Some helpful tips

✨🌞அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில👌 கருத்துகள்:::☝

(மிக நீஈஈஈண்ட பதிவு)

👍ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும். 
👍ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .
வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.
👍ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது . 
👍ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான். 
அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான். 
ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.
👍நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான். 
👍உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

👍கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
👍காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.
👍பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.
👍சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும். 
👍சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
👍கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான். 
களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
👍விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். 
👍இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். 
👍கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும். 
ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
👍அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.
ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
👍யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

👍எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
👍அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.
👍சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும். 
அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும், 
👍வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும். 
👍அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.
கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.
👍எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான். 
👍மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.
பாம்பு, அரசன் , புலி, கெட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .
👍பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.
கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.
👍கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

👍வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.
பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

👍பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

👍வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது. 

👍கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை. 
உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.

இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி – எவ்வளவு சத்து தெரியுமா?

இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி – எவ்வளவு சத்து தெரியுமா?

காலங்காலமாக பலரது வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், பூரி போன்றவை தான். இதுவரை நாம் பழங்கள் மற்றும் காய்கறிகளில் எவ்வளவு சத்துக்கள் உள்ளது என்று தான் படித்திருப்பீர்கள். ஆனால் நாம் காலையில் உட்கொள்ளும் உணவுகளில் எவ்வளவு சத்துக்கள் உள்ளது என்று படித்திருக்கமாட்டீர்கள்.

குறிப்பாக இட்லி, தோசை, பூரி மட்டுமின்றி, அதற்கு சைடு டிஷ்ஷாக சாப்பிடும் சட்னி, சாம்பார்களில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்று உங்களுக்கு தெரியாது. எனவே தமிழ் போல்ட்ஸ்கை அன்றாடம் நாம் சாப்பிடும் காலை உணவுகளில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இட்லி

நீங்கள் சாப்பிடும் 3 இட்லியில் கலோரி 229 கிலோவும், கார்போஹைட்ரேட் 49 கிராம், புரோட்டீன் 7.2 கிராம், கொழுப்புச்சத்து 0.4 கிராம், கால்சியம் 30 மி.கி, இரும்புச்சத்து 3.5 மி.கி நிறைந்துள்ளது.

தோசை

இரண்டு தோசையில் கலோரி 254 கிலோவும், கார்போஹைட்ரேட் 42 கிராம், புரோட்டீன் 6.2 கிராம், கொழுப்பு 6.9 கிராம், கால்சியம் 16 மி.கி, இரும்புச்சத்து 2.8 மி.கி அளவும் உள்ளது.

பொங்கல்

ஒரு பெரிய கப் பொங்கலில் கலோரிகள் 430 கிலோவும், கார்போஹைட்ரேட் 66 கிராம், புரோட்டீன் 8.6 கிராம், கொழுப்புச்சத்து 14.7 கிராம், கால்சியம் 23.1 மி.கி, இரும்புச்சத்து 6.9 மி.கி அடங்கியுள்ளது.

சப்பாத்தி

2 சப்பாத்தியில் கலோரிகள் 297 கிலோவும், புரோட்டீன் 8.3 கிராம், கார்போஹைட்ரேட் 47 கிராம், கொழுப்பு 8.3 கிராம், இரும்புச்சத்து 7.8 மி.கி, கால்சியம் 32.8 கிராம் அளவும் நிறைந்துள்ளது.

பூரி

3 பூரியில் கலோரிகள் 240 கிலோவும், கார்போஹைட்ரேட் 35 கிராம், புரோட்டீன் 6.1 கிராம், கொழுப்புச்சத்து 8.4 கிராம், கால்சியம் 24.2 மி.கி, இரும்புச்சத்து 5.8 மி.கி அடங்கியுள்ளது.

ரவை உப்புமா

பலருக்கு உப்புமா என்றாலோ பிடிக்காது. ஆனால் 1 பெரிய கப் உப்புமாவில் 260 கலோரிகளும், கால்சியம் 3.6 மி.கி, இரும்புச்சத்து 1.3 மி.கி, புரோட்டீன் 6.4 கிராம், கார்போஹைட்ரேட் 33 கிராம் உள்ளது.

தேங்காய் சட்னி

இட்லி அல்லது தோசைக்கு சைடு டிஷ்ஷாக சாப்பிடும் 1 கப் தேங்காய் சட்னியில் கலோரிகள் 125 கிலோவும், புரோட்டின் 2 கிராம், கொழுப்புச்சத்து 10.4 கிராம், கார்போஹைட்ரேட் 6 கிராம், கால்சியம் 23 மி.கி, இரும்புச்சத்து 6 மி.கி அளவும் உள்ளது.

சாம்பார்

1 கப் சாம்பாரில் 81 கலோரிகளும், புரோட்டீன் 4 கிராம், கால்சியம் 38 மி.கி, கார்போஹைட்ரேட் 12 கிராம், கொழுப்புச்சத்து 2.1 கிராம், இரும்புச்சத்து 1.2 கிராம் நிறைந்துள்ளது.

பூரிக்கான மசாலா

பூரிக்கான உருளைக்கிழங்கு மசாலாவில் 128 கலோரிகளும், புரோட்டீன் 1.5 கிராமும், கார்போஹைட்ரேட் 20 கிராம், கால்சியம் 17 மி.கி, இரும்புச்சத்து 5 மி.கி அளவும் உள்ளது.

பருப்பு அல்லது தால்

சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக செய்து சாப்பிடும் பருப்பு அல்லது தாலின் ஒரு கப்பில் கலோரிகள் 316 கிலோவும், புரோட்டீன் 19.2 கிராம், கார்போஹைட்ரேட் 47 கிராம், கால்சியம் 71.8 மி.கி, இரும்புச்சத்து 7 மி.கி நிறைந்துள்ளது.

Saturday, October 17, 2015

மனைவியை மடக்க சில யோசனைகள்....

மனைவியை மடக்க சில யோசனைகள்....😜

1. மாமியார் விரதம் இருக்கும் போது ” உங்க அம்மா ஏன் அடிக்கடி விரதம் இருந்து உடம்ப வருத்திகராங்க?”னு அக்கரையா கோப படனும்(கொஞ்சம் நடிங்க பாஸ்..)

2. டீவியில நகைகடை விளம்பரம் போகும் போது “அந்த டிசைன்ல ஒரு செயின் உனக்கு ஒன்னு வாங்கனும் “னு அவுத்து விடனும்”

3. நண்பர்கள் போன் பண்ணி டீரிட் க்கு கூப்டாங்கனா
” இல்ல டா ஈவ்னிங் என் வெய்ஃப் கூட கோவிலுக்கு போறேன் என்னால வர முடியாது” ன்னு அவங்க காதுல கேக்கர மாதிரி சத்தமா சொல்லனும்

4. உங்க வீட்டுக்கு போயிட்டு வரனும் மாமா அத்தைய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அப்படினு குழந்தை மாதிரி சோகமா பேசனும்.

5. அடிக்கடி “எப்படி நீ இவ்வளவு அழகா பொறந்தனு ”சொல்லனும்.

6. மனைவி முன்னாடி மச்சினி கிட்ட அவங்க படிப்பு கேரியர் பத்தி பேசனும்.(படிப்ப பத்தி மட்டும் தான் )

7. செல்போன் ல வால்பேப்பரா மனைவி போட்டோ வச்சிகனும்.(வேற வழி இல்ல)

8 . அதிகாலைல எந்திரிச்சு அவங்க முகத்த பார்க்கும் போது மனசா திடமா வச்சிகனும் , பயத்துல ” அய்யோ அம்மா “ன்னு பதறினீங்கனா போச்சு மொத்தமா போச்சு.

9. அவங்க சமைத்த சாப்பாடு சாப்பிடும் போது முகம் மலர்ந்து சாப்பிடனும், மறந்து கூட முகத்த சுளிக்க கூடாது.

10 . கோவமா பூரி கட்டையால அடிச்சாங்கனா முதல் அடியிலே சுருண்டு விழுந்து துடிக்கனும், மீறி ஸ்பர்டன் வீரன் மாதிரி வீரமா நின்னா
பேஸ் ப்ரஷ்ஷா ஆயிடும்..!😂😂😂😂

Thursday, October 8, 2015

விஜய்க்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு..

புலி படம் மற்ற ரசிகர்களிடம் சிக்கி கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும் மீமிஸ்களை உருவாக்கி இப்படத்தை கலாய்த்து வருகின்றனர்.

இதனால் விஜய் ரசிகர், விஜய்யை பற்றி பலரும் மறந்த ஒரு சில விஷயங்களை மன உருக்கத்துடன் கூறியுள்ளார். தற்போது இது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ் மண்ணில் தமிழனுக்கே முன்னுரிமை. ஆனால் இங்கு சிலர் அல்ல, பலர் வந்தேறி நடிகர்களை தூக்கி முன்னிறுத்தி துதி பாடுகின்றனர். ஆனால் இந்த மண்ணில் பிறந்த சக தமிழர் நடிகர்களை குறை சொல்லியே மட்டம் தட்டுகின்றனர்.

வடிவேலு விஜய்யின் புலி படத்தை விமர்சனம் செய்றீங்க, செய்யுங்கள் தவறில்லை. ஆனால் வெளிவரும் எல்லா திரைப்படங்களையும் மட்டம் தட்டி பதிவிடுகிறிர்கள் இது சரியா? விஜய் ஒரு தமிழன், இன்று தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களில் இருக்கும் ஒரே தமிழன் அவர் தான். தமிழ் சினிமாவிற்கு வேறு மொழியில் இருந்து நடிக்க வந்தவர்கள் தான் அன்றும் இன்றும் முன்னனி நடிகர்களாக இருக்கிறார்கள்.

ரஜினி, கமல், அஜித், தனுஷ் இவர்கள் திரைப்படம் வெளிவரும் போது இம்மாதிரியாக நீங்கள் நடந்துகொள்வதில்லை ஏன்? இன்று விஜய்யை மட்டுமே மட்டம் தட்டும் நீங்கள் தமிழ் இனத்திற்காக எழுதியதுண்டா? போராடியதுண்டா? சிறை சென்றதுண்டா? ஒரு ஏழைக்குழந்தைக்கு ஒரு வேளை உணவை கொடுத்ததுண்டா? ஒரு ஏழைக்கு கல்வி பயில உதவியதுண்டா?

இதை வித்தியா பவுண்டேஷன் முலம் விஜய் செய்கிறார்.

ஈழத்தில் 2008ல் சண்டை தொடங்கிய போது, தன் தாயாருடன் முதல் ஆளாக உண்ணாவிரதம் இருந்தவர் இவர்தான். தமிழ்நாட்டில் சென்னையில் அனைத்து நடிகர்களிடமும் உங்கள் ரசிகர்களின் சார்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பசொல்லுங்க என்று சொன்னவர்.

2008 இல் ராமேஸ்வரத்தில் போர் தொடங்கிய போது, தன் விஜய் மக்கள் இயக்கம் முலம் பல்லாயிரம் ரசிகர்களுடன் கண்டன ஆர்பாடத்தை தொடங்கினார். ஆனால் தொடங்கிய சில மணி நேரத்தில் அப்போதைய கலைஞர் சொல்லி காவல் துறையேவப்பட்டு கூட்டத்தை அடித்துக் கலைத்ததை நீங்கள் அறிவிர்களா? பிறகு தான் சென்னையில் ஆர்பாட்டத்தை தொடங்கினார்.

அப்போது போரை நிறுத்த சொல்லி தன் ரசிகர்களை தூண்டிவிட்டு பல இலட்சம் தந்திகளை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்ப செய்தவர், இந்த தமிழன் விஜய். 2008-2009 கால கட்டத்தில் இந்த தமிழ் மண்ணை ஆண்ட திராவிட கூட்டம் கூட ஈழத்திற்கு எதிராக தான் செயல்பட்டது என்பது நீங்கள் அறிவீர்கள்.

கடந்த மாதம் தமிழீழ அரசாங்கம் மேற்கொண்ட கையெழுத்து போராடத்திற்கு 10 லட்சம் ஓட்டு இலங்கைக்கு எதிராக போட twitter பக்கத்தில் வாக்கு சேகரித்தவர் இவர்தான். இவரை தமிழ்நாட்டில் இழிவு செய்ய காரணம் இவர் தமிழன். இவரை இழிவு செய்யும் சிலர் “கன்னடம், மளையாளம், தெலுங்கில் இருந்து வந்த நடிகர்களை இழிவு செய்ய மாட்டங்குறீங்க ஏன்?

தொடர்ந்து 10 வருடங்களாக இவர் படம் திரையிடுவதற்கு முன், தினம் சில திராவிட அரசியல்வாதிகள் தூண்டுதலால் இவர் படம் வெளியிட தடை கோரி நீதி மன்றத்தில் வழக்கு பதியும்.

காரணம் இவர் அரசியலில் நுழைந்தால் ஒரு கோடி வாக்குகள் திராவிட கட்சியில் இருந்து பிரியும், அதற்காக எல்லா திரைபடமும் அரசியல் கட்சியால் முடக்கப்படுகிறது. அது சரி நம்ம தமிழன் என்று தமிழனை வாழவைத்துள்ளான்.

Super comedy enjoy...

No : 1

நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம
ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No: 2

உன் பேரு என்ன..?

" சௌமியா "

உங்க வீட்ல உன்னை எப்படி
கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 3 ( இண்டெர்வியூ.. )

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா " கோவா "

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 4

( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா
வாங்க கடைக்குச் போறான். )

கடைக்காரர் : சார் உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா...?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல
எங்க அம்மாவா என்னை பீட்ஸா
வாங்க அனுப்புவாங்க...!?? அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா...

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 5

நடிகர் simbu : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு
மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு
இருக்கேன்..

நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே
அது மக்களுக்கு பண்ற பொதுசேவை
தானே சார்..!!

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *

No : 6

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு
ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை
கொடுக்கணும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு..

* * * * * * * * * * * * * * * * * *

No : 7 ( கல்யாண மண்டபம்.. )

"வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?
பொண்ணு வீட்டுக்காரரா..? "

" ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!"

* * * * * * * * * * * * * * * * * *



No: 8

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?
அவர் : தெரியுது...

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

* * * * * * * * * * * * * *

முயற்சியை பொறுத்து தான் வெற்றி, தோல்வி..!!

முயல், ஆமை கதையின்  #லேட்டஸ்ட்_வெர்ஷன் .
முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.
 #நீதி : தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!
வெயிட்... இனிதான் கதையே ஆரம்பம்!
தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்’ என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.
 #நீதி2 : நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!
கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்... அதுதான் இல்லை!
காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு ட்விஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).
ஒன்... டூ... த்ரீ...
முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. பார்த்தால் அங்கே ஒரு ஆறு!
அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!
 #நீதி3 : நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
இன்னும் கதை முடியவில்லை மக்களே.!
ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது... ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?
ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்? ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!
 #நீதி4 : டீம் வொர்க் வின்ஸ்!
 #டீம்_வொர்க் 
‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1 = 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.
அலுவலக வேலைகளுக்கு மட்டும் இல்லை, வீடுகளிலும் டீம் லிவ்ங் இருந்தால்தான், ஒரு குடும்பம் சிறப்பாகச் செயல்படும். எல்லோரின் பங்களிப்பும் தேவை குடும்பத்தில். எனவே, டீம் வொர்க் வளர்ச்சிக்கு மட்டும் இல்ல, வாழ்வதற்கும் மிக முக்கியம்.
இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை. நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம், இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே!
வாழ்க்கையில் 
முயலும் ஜெயிக்கும், 
ஆமையும் ஜெயிக்கும். 
 #முயலாமை  மட்டுமே ஜெயிக்காது.
முயன்று தோற்றால்  #அனுபவம் .
முயலாமல் தோற்றால்  #அவமானம் .
வெற்றி நிலையல்ல,
தோல்வி முடிவல்ல..
முயற்சியை பொறுத்து தான் வெற்றி, தோல்வி..!!

வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா"

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண். வீட்டு
வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை
வாங்க அவளை கூப்பிடுகிறாள்.
" ஒரு கட்டு கீரை என்ன விலை....?"
" ஓரணாம்மா"
"ஓரணாவா....? அரையணாதான் தருவேன்.
அரையணான்னு சொல்லி நாலு கட்டு
கொடுத்திட்டு போ"
"இல்லம்மா வராதும்மா".
" அதெல்லாம் முடியாது. அரையணாதான்". பேரம்
பேசுகிறாள் அந்த தாய்.
பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண்
கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம்
சென்றுவிட்டு
"மேல காலணா போட்டு கொடுங்கம்மா"
என்கிறாள்
"முடியவே முடியாது. கட்டுக்கு அரையணாதான்
தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.
கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு "சரிம்மா
உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு
கீரையை கொடுத்துவிட்டு ரெண்டணா காசை
வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்
வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.
"என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று
அந்த தாய் கேட்க
"இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும்"
"சரி. இரு இதோ வர்றேன்." என்று கூறிவிட்டு
வீட்டுக்குள் சென்றவள், திரும்பும்போது ஒரு
தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். "
இந்தா சாப்ட்டு போ" என்று கீரைக்காரியிடம்
கொடுத்தாள்.
எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த
தாயினுடைய மகன்" ஏம்மா அரையணாவுக்கு
பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி அரையணான்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
ரெண்டரையணா வருதும்மா.....? என்று கேட்க
அதற்கு அந்த தாய்,
"வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது,
தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா" என்று
கூறினாள்...!!!

Saturday, October 3, 2015

உண்மை நண்பனின் பேச்சைக் கேட்காதவனுக்கு ஆபத்து உறுதி

நரியின் தந்திரம் - 2
.
மான் பயிர்களை மேய்வதனைக் கண்ட விவசாயி கோபம் கொண்டான். மறுநாள் அந்த மானைப் பிடிப்பதற்காகத் தன்தோட்டத்தில் ஒரு தோலால் செய்யப்பட்ட வலையினை விரித்துவைத்துக் காத்திருந்தான்.
.
மறுநாள் மானுடன் நரி வரவில்லை. மான் மட்டும் வந்து பயிர்களை மேய்ந்தது. அப்போது அது விவசாயி விரித்து வைத்த தோல் வலையில் மாட்டிக்கொண்டது.
.
அடடா இன்று நம் நண்பன் நரி நம்முடன் வரவில்லையே அவன் வந்திருந்தால் இந்தத் தோல் வலையைக் கடித்து, அறுத்து நம்மைக் காப்பாற்றியிருப்பானே’ என்று நினைத்து வருந்தியது.
.
அப்படி அது நினைத்த நேரத்தில் நரி அங்கு வந்தது சேர்ந்தது. நரியைக் கண்டதும் சந்தோஷமடைந்த மான், ‘நண்பா நான் வலையில் அகப்பட்டுக்கொண்டேன். என்னை உடனே காப்பாற்று’ என்று கூறியது.
.
அதற்கு அந்த நரி, ‘நான் நண்பனுக்காக உயிரையே தரக்கூடியவன். ஆனால், நான் இன்று விரதம். தோல்வலையை வாயால் தீண்டமாட்டேன். நாளைக்கு என்றால், நான் உன்னைக் காப்பாற்ற முடியும்’ என்று கூறிவிட்டு அங்கிருந்த புதரில் ஒளிந்துகொண்டது.
.
மேய்ச்சலுக்குச் சென்ற தன் நண்பன் இதுவரை திரும்பவில்லையே என்று மானைத் தேடிக்கொண்டுவந்த காகம், விவசாயியின் தோட்டத்தில் வலையில் அகப்பட்டிருந்த மானைக் கண்டது.
.
‘நண்பா! ஏன் இங்கு வந்தாய்? இப்படி ஆபத்தில் சிக்கிக்கொண்டாயே!’ என்று வருத்தத்துடன் கேட்டது காகம்.

நண்பா உன் பேச்சைக் கேட்காமல் நரியுடன் நட்புக்கொண்டேன். அவன் பேச்சை நம்பி இந்தத் தோட்டத்தில் மேயவந்தேன். விவசாயி வலைவிரித்து என்னைப் பிடித்துவிட்டான்’ என்றது.
.
எங்கே அந்த நரி? அவன் உன்னுடன் வரவில்லையா?’ என்று காகம் கேட்டது.
.
அவன்தான் திட்டமிட்டு என்னை இங்கே சிக்கவைத்துள்ளான். என்னை உண்பதற்காக இங்கேதான் எங்காவது ஒளிந்திருப்பான்’ என்றது மான்.
.
உண்மை நண்பனின் பேச்சைக் கேட்காதவனுக்கு ஆபத்து உறுதி என்பது உன் விஷயத்திலும் உண்மையாகிவிட்டதே என்று வருந்திய காகம், மானைக் காப்பாற்ற வழியினைத் தேடியது. அதற்குள் விவசாயி சற்று தொலைவில் வந்துகொண்டிருந்தார்.
.
அவனைக் கண்ட காகம் மானிடம், நண்பா நான் சொல்வதுபோலச் செய். நீ உன் மூச்சை அடக்கிக்கொண்டு இறந்தவன் போலப் படுத்திரு. விவசாயி நீ இறந்துவிட்டதாக நினைத்து, தோல்வலையை உன் கால்களிலிருந்து நீக்கிவிட்டு, அதனைக் கொண்டு சென்று அவன் குடிலில் வைத்துவிட்டு மெதுவாகத்தான் உன்னை அறுக்க வருவான். அவன் தோல்வலையை எடுத்துக்கொண்டு குடிலுக்குள் சென்றவுடன் நான் ஒலி எழுப்புகிறேன். உடனே நீ எழுந்து தப்பிவிடு’ என்றது.
.
மான் அவ்வாறே செய்தது. விவசாயி மான் இறந்துவிட்டதாக நம்பினார். அதன் கால்களிலிருந்து அந்தத் தோல்வலையை நீக்கிவிட்டு, அந்த வலையை எடுத்துச்சென்று தன் குடிலில் வைத்தான்.
.
காகம் ஒலி எழுப்பியது. மான் எழுந்து துள்ளிப்பாய்ந்து ஓடியது. குடிலைவிட்டு வெளியே வந்த விவசாயி மான் ஓடுவதைப் பார்த்தான். அருகில் இருந்த ஒரு பெரிய இரும்புத்தடியை எடுத்து அதனை நோக்கி எறிந்தான். அவன் குறி தப்பிவிட்டது. அந்த இரும்புத்தடி புதரில் ஒளிந்திருந்த நரியின் தலையில் பட்டது. அடிபட்ட நரி துடிதுடித்து இறந்தது.
.
.
இதுக்குத்தான் கெடுவான் கேடு நினைப்பான் என்று சொன்னாங்க

நரியால் மான் பட்ட துன்பம். என்னவென்று காகம் சொன்னது.

நரியால் மான் பட்ட துன்பம். என்னவென்று காகம் சொன்னது.
.
மகதநாட்டில் உள்ள சண்பகவனத்தில் காகமும் ஒரு மானும் நட்பாக இருந்தன. மான் அந்தக் காட்டில் இருந்த நல்ல புற்களை நாள்தோறும் சாப்பிட்டு மற்ற மான்களைவிட வளமாக கொழுத்துப் பெருத்திருந்தது.
.
அப்படிக் கொழுத்துப் பெருத்திருந்த மானைத் தந்திரமாக வேட்டையாடி உண்டுவிடவேண்டும் என்று அதே காட்டில் வசித்த சம்புகன் என்கிற சிறு நரி ஒன்று திட்டமிட்டது.
.
ஒருநாள் புற்களை மேய்ந்துகொண்டிருந்த மானிடம் நெருங்கிவந்த நரி, ‘நண்பா நலமா?’ என்று கேட்டது. நரியைப் பார்த்து மெருண்ட மான், அது சிறிய நரி என்பதால் அதிகமாக பயப்படாமல், ‘நீ யார்? உன்னை இந்தக் காட்டில் நான் பார்த்ததில்லையே என்றது. ‘
.
நான் இந்தக் காட்டில் யாருடைய நட்பும் இன்றித் தனித்துத் திரிகின்றேன். உன்னைப் பார்த்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உனக்கு உதவிசெய்துகொண்டு உன்னுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன்’ என்று வஞ்சகமாகப் பேசியது நரி.
.
நரியின் வார்த்தையை நம்பிய மான், அதனுடன் நட்புகொண்டது. மாலையில், இருவரும் ஒரு மரத்தடியில் வந்து நின்றனர். அப்போது அந்த மரத்திலிருந்த காகம், ‘என்ன நண்பா! உன் அருகில் இருக்கும் புதியவர் யார்?’ என்று விசாரித்தது
.
‘இவன் பெயர் சம்புகன். இவன் என்னுடைய புதிய நண்பன்’ என்றது மான்.
.
‘நண்பா நீ வெள்ளைமனம் படைத்தவன். வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்துவிடாதே முன்பின் தெரியாதவனை உன் நண்பனாக ஏற்றுக்கொள்ளாதே அவனைப் பற்றி ஒன்றுமே தெரியாமல், அவனது நடத்தையைப் பற்றி ஏதும் அறியாமல், நீ அவனுக்கு உன் அருகில் இடம்கொடுத்தால், பூனைக்கு இடம் கொடுத்து இறந்த கழுகைப் போல் நீயும் இறந்துவிடுவாய்’ என்று கூறி மானை எச்சரித்தது காகம்.
.
காகத்தின் கருத்தினைக் கேட்டுக்கொண்ட மான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தது.
.
உடனே, நரி ‘ஒருவனுடைய குணத்தை எப்படி அவனுடன் நட்புகொள்வதற்கு முன்பே அறிந்துகொள்ளமுடியும்? அதுவும் தவிர, நல்லவர்களுக்கு அது ஒத்துவராது. நல்லவர்களைப் பார்த்தவுடனேயே அவர்களுடன் நட்புகொள்ளலாம்’ என்றது.

நரியின் நயமான வார்த்தைகளை நம்பிய மான், காகத்தைப் பார்த்து ‘நீ எனக்கு எப்படி நல்ல நண்பனோ அதுபோலவே இந்த நரியும் இனி எனக்கு நல்ல நண்பன்’ என்று திட்டவட்டமாகக் கூறியது. அதன் பின்னர் மான், நரி, காகம் ஆகிய மூன்றும் ஒன்றாகவே இருந்தன. நாட்கள் கழிந்தன.
.
எப்படியாவது அந்தக் கொழுத்த மானை வேட்டையாடிவிடவேண்டும் என்று நினைத்த நரி, ‘நண்பா நான் இந்தக் காட்டில் செழிப்பான பயிர்கள் விளைந்திருக்கும் ஒரு பகுதியைக் கண்டேன்.’ என்று மானிடம் ஆசை வார்த்தை கூறியது.
.
அப்படியா நண்பா இதுவரை நான் அந்தப் பகுதியைப் பார்த்ததில்லையே என்றது மான். நரி, ‘என்னுடன் வா நண்பா நான் உனக்கு அந்தப் பகுதியைக் காட்டுகிறேன். வஞ்சகமாகக் கூறியது.நரி
.
நரியின் வார்த்தைகளை நம்பி, அதன் பின்னே சென்றது அந்த மான். நரி காட்டிய அந்தப் பகுதி, காட்டில் வசித்து வரும் ஒரு விவசாயியின் தோட்டம். அதில் அவன் நல்ல பயிர்களைச் செழிப்பாக வளர்த்துவந்தான்.
.
நரியின் யோசனையால் அந்தத் தோட்டத்துக்குள் புகுந்த மான் தன் வயிறு நிறைய உண்டது. அதன் பிறகு நாள்தோறும் நரியுடன் வந்த மான் அந்தப் பயிர்களை திருப்தியாகச் சாப்பிட்டு காலம் கழித்தது.
.
தன் தோட்டத்தில் பயிர்கள் குறைவதைக் கண்ட விவசாயி, இதைக் கண்டுபிடிப்பதற்காக ஒருநாள் மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்தான். அவன் அப்படி ஒளிந்திருந்ததை நரி பார்த்துவிட்டது. ஆனால், அது மானிடம் சொல்லவில்லை....
.
இதனால் அந்த மான் என்ன ஆனது என்று அடுத்து சொல்கிறேன்

Friday, October 2, 2015

வாயையும் கைய்யையும் வச்சுக்கிட்டு சும்மா இருக்கணும்

வாயையும் கைய்யையும் வச்சுக்கிட்டு சும்மா இருக்கணும் 
.
.

ஒரு சிறிய காடு. அங்குள்ள ஒரு மரத்தில் இரண்டு தூக்கணாங் குருவிகள் கூடுகட்டி வாழ்ந்துவந்தன. அதே மரத்தில் ஒரு குரங்கும் வசித்துவந்தது. தூக்கணாங்குருவிகள் தன் கூட்டில் ஓய்வெடுக்கும்போது, அந்தக் குரங்கு மரக்கிளையில் சாய்ந்துகொண்டு ஓய்வெடுக்கும்.
.
இதனைப் பார்த்த ஆண் தூக்கணாங்குருவி, ‘குரங்கே நீயும் எங்களைப் போல ஒரு கூடுகட்டிக்கொண்டு அதில் வாழலாமே! என்றது.
.
குரங்கு, ‘எனக்குக் கூடுகட்டத் தெரியாது’ என்றது.
.
கைகள் இல்லாத நாங்களே கூடுகட்டும்போது கைகள் இருக்கும் நீ ஏன் கூடுகட்டப் பழகிக்கொள்ளக் கூடாது?’ என்றது ஆண் தூக்கணாங்குருவி.
.
நான் எதைப் பழகவேண்டும் என்பது எனக்குத் தெரியும். நீ எனக்கு அறிவுரை கூறவேண்டாம்’ என்று குரங்கு கூறியது.
.
அப்போது பெண் தூக்கணாங்குருவி, ஆண் குருவியைப் பார்த்து, ‘உங்களுக்கு ஏன் இந்த வேலை? அந்தக் குரங்கு கூடுகட்டினால் என்ன, கட்டாவிட்டால் நமக்கு என்ன? நீங்கள் ஏன் அந்தக் குரங்குக்கு அறிவுரை கூறுகிறீர்கள். அந்தக் குரங்கு கோபப்பட்டு ஏதாவது செய்துவிட்டால் நமக்குத்தானே தொல்லை. உங்களுக்கு அறிவேயில்லை ’ என்று திட்டி அடக்கியது.
.
ஒருநாள் அந்தக் காட்டில் பெரும் புயற்காற்று வீசியது. கனமழை பொழிந்தது. அந்த மரமே ஆடியது. இரண்டு தூக்கணாங் குருவிகளும் தன்கூட்டில் பத்திரமாக அமர்ந்துகொண்டு மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன.
அப்போது குரங்கு மட்டும் மழையில் நனைந்து, குளிரில் நடுங்கியபடியே அந்த மரத்திற்கு வந்தது. அதனைப் பார்த்த இரண்டு தூக்கணாங்குருவிகளும் இரக்கப்பட்டன.
.
பெண் தூக்கணாங்குருவி, ‘அந்தக் குரங்கிடம் ஏதும் பேசாமல் அமைதியாக இருங்கள்’ என்று ஆண் குருவியிடம் சொன்னது.
.
ஆனால் ஆண் தூக்கணாங்குருவி அதைக் கேட்காமல், குரங்கைப் பார்த்து, ‘ஏய், குரங்கே ஒரு கூடு கட்டிக்கொள் என்று நான் அன்றே உனக்கு அறிவுரை கூறினேன் அல்லவா? அப்போதே உன் கைகளால் கூடுகட்டப் பழகியிருந்தால், இன்று ஒரு கூட்டினைக் கட்டியிருப்பாய். எங்களைப் போல நீயும் மழையில் நனையாமல் நிம்மதியாக இருந்திருக்கலாம். நீ தான் என் பேச்சைக் கேட்கவில்லை. இப்போது அவஸ்தைபடுகிறாய்’ என்றது.
.
குரங்குக்கு அவமானமாக இருந்தது. ‘இந்தச் சின்னக் குருவி நமக்கே அறிவுரை கூறுகிறதா’ என்று நினைத்துக் கோபப்பட்டது. எனக்குக் கைகள் இருக்கிறது. அந்தக் கைகளுக்குக் கூடு கட்டத்தெரியாது. ஆனால், ஒரு கூட்டினைப் பிரித்துவிட அந்தக் கைகளுக்கு நன்றாகத் தெரியும்’ என்று கூறி, அந்தத் தூக்கணாங்குருவிகளின் கூட்டினைப் பிரித்துப் போட்டுவிட்டது.
.
அந்தக் குரங்கினைப் போலவே, இந்த இரண்டு தூக்கணாங்குருவிகளும் மழையில் நனைந்து, குளிரில் நடுங்கத் தொடங்கின.
.
.
வார்தைகளை எங்கே உபயோகிக்கணுமோ அங்கே உபயோகிக்கணும் , இல்லை என்றால் அவஸ்தை படணும் 
.

Bahavath geethai பகவத்கீதை

பகவத்கீதை பதிவு-7

கிருஷ்ணன்:- உண்மையில் மனிதனோடு தொடர்புடையது கர்மங்கள் அல்ல அந்த கர்மங்களோடு சம்மந்தப்பட்ட ஆசைகளேயாகும்.

அர்ஜூனன்:- எவ்வாறு மாதவா?

கிருஷ்ணன்:- நிகழும் இந்த யுத்தத்தில் நீ வெற்றி மீது ஆசை கொண்டு தோல்வியை தழுவினால் அளப்பறிய வேதனை அகத்தை சூலும். அந்த வேதனை உனை ஏனைய காரியங்களை செய்யத்தூண்டும். ஆதலால் நீ மறு ஜென்மம் எடுப்பாய். ஒருவேலை போரில் வெற்றி பெற்றால் உன்னில் அகங்காரம் ஓங்கும். அந்த அகங்காரம் உன்னில் அகிலத்தை வெல்லும் ஆசையை தூண்டும். ஆதலால் படுகொலைகளை செய்வாய். பாவக்கடல்தனில் மூழ்குவாய். சிந்தித்துப்பார், ஒருவேலை நடக்கும் யுத்தத்தில் வெற்றியின் மோகமோ, தோல்வியின் பயமோ இல்லாதிருந்தால் யுத்தத்தின் இறுதியில் நீ பெறுவது சுகமா? இல்லை துக்கமா பார்த்தா?

அர்ஜூனன்:- சுகமும் அன்று மாதவா! துக்கமும் அன்று
கிருஷ்ணன்:- எனில் உன்னுடைய சுகம் துக்கம், வேதனை நிராசை அகங்காரத்திற்கு இந்த யுத்தம் காரணம் அல்ல. நிகழும் யுத்தத்தோடு நீ கொண்டிருந்த அளப்பறிய ஆசைகளே அதற்கு காரணமாகிறது. எனது வார்த்தைகள் சத்தியம் தானே பார்த்தா?

அர்ஜூனன்:- ஆம் மாதவா!

கிருஷ்ணன்:-
(ஸுக துகே ஸமே க்ருத்வா லாபா லாபௌ ஜயாஜயௌ
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபம் அவாப்ஸ்யஸி-2.38)
அதாவது சுக துக்கத்தை சமமாய் பாவித்து, லாபம் நஷ்டம் வெற்றி தோல்வி பற்றி எண்ணாமல் நீ யுத்தம் புரிந்தால் தனஞ்ஜெயா, நீ என்றும் பாவத்தின் பாகமாக மாட்டாய். இதையே கர்ம யோகம் என்று கூறுவர். எவர் ஸாங்கிய ஞானத்தை பெறுகின்றாரோ அவர் ஒன்றை அறிவார், கூட்டில் குடியிருப்பது ஆத்மா என்று உணர்வார். சரீரத்தின் சுகமான அனுபவங்கள் எல்லாம் மரணம் வரையிலேயே! அதாவது அவை உண்மையல்ல வெறும் மாயையே! இதை உணர்ந்தால் கர்ம யோகியாவது இலகுவாகிவிடுகிறது

அர்ஜூனன்:- ஆனால் மாதவா, காரிய பந்தம் நிச்சயம் என்றால் உலக வாழ்வை தியாகம் செய்து துறவரம் மேற்கொள்ளலாம் அல்லவா?

கிருஷ்ணன்:- அந்த எண்ணத்தினால் விளைந்த விளைவு தான் இந்த யுத்தம் என்று உணர்வாய். சிந்தித்துப்பார், சத்வ குணங்கள் அனைத்தும் நிறைந்த தர்மத்தை பற்றி அறிந்தோர் கர்மத்தை விட்டு விலகுகையில் அதர்மம் எண்ணம் கொண்டோர் கரங்கள் அகிலத்தை எரிக்க துவங்குகிறது. அன்று பிதாமகர் தனது சுகத்தை தியாகம் செய்யாது இருந்திருந்தால் அதர்மத்தின் கரம் இன்று ஓங்கியிருக்காது! அன்று உனது தந்தை துறவரத்தின் வழி செல்லாது இருந்திருந்தால் உன் தமயரான தர்மசீலர் யுதிஷ்டிரன் இன்று அரசாண்டிருப்பார். அவரது ராஜ்ஜிய பிரஜைகளும் அவரால் தர்ம ஞானத்தை பெற்றிருப்பார்கள். வேதனை தரும் செய்தி ஒன்றை கூறுகிறேன் கேள், சத்வ குணம் நிறைந்தவர்களால் மட்டுமே அகிலமானது நன்மையை பெறும். ஆனால் அவர்கள் அனைவரும் துறவரம் வழி செல்கின்றனர். நதியின் நீர் ஆவியாகி இல்லாமல் போனால் மீதம் இருப்பது என்ன? பயனற்ற சேரு மட்டுமே மிஞ்சும் அதுபோலவே, சத்வகுண ஞானிகள் அகிலத்தை தியாகம் செய்து விலகிச்சென்றால் தமஸ் குணமானது நிறைந்த அதர்மிகள் அகிலத்தில் நிறைந்துவிடுகின்றனர். அதனால் அகிலத்தில் பாவமும் அதர்மமும் தழைக்கிறது. அந்த விசீத்ர நிலை உருவாகும் போது கர்மயோகி அகண்ட அகிலத்தை காக்க முன்வருகின்றார். ஒரு கர்மயோகி, பலன்கள் ஆசைகளை தியாகம் செய்வார். ஆனால் கர்மங்களை தியாகிக்கமாட்டார். அவரை இந்த அகிலத்தில் வாழ்கின்ற சந்நியாசி எனவும் கூறலாம். நற்காரியங்களை செய்பவர், அதன் பலன்களை புறக்கணிப்பவர். கர்மயோகி தான் ஈன்றவர் இடத்திலோ உறவினர் இடத்திலோ தன் பரஜைகள் இடத்திலோ எந்தவொரு வேண்டுதலையும் முன்வைக்க மாட்டார். துறவரத்தின் பலன் ஒன்றினை மட்டுமே அவர் பெறுவார். ஆனால் அகிலத்தில் பலனை எதிர்ப்பாராத பணிகளை செய்வார்.

அர்ஜூனன்:- மனிதன் வாரிசுகளின் சுகத்திற்காக உழைப்பவனாக விளங்குகையில் தன் வாரிசிடம் இருந்து ஏன் அவன் சுகம் பெறக்கூடாது?

கிருஷ்ணன்:- மானிடர் வாரிசுகளுக்காக செய்யும் கர்மங்கள் அனைத்தும் வியாபாரமா அல்லது அன்பா?

அர்ஜூனன்:- அன்பு மாதவா!!!

கிருஷ்ணன்:- எனில் கர்மத்தின் பிரதிபலன் மேல் இச்சைக் கொள்வது சரியா? எதிர்கால லாபத்தை சிந்தித்தால் அது வியாபாரமாகும் விஜயா! அதில் அன்பு இருக்காது. எந்த மனிதன் தன் வாரிசுகளின் எதிர்காலத்தை நல்முறையில் அமைக்கின்றானோ, தன் வாரிசுகளுக்கு அன்பையும் தர்மத்தையும் எடுத்துரைக்கின்றானோ அவனுடைய வாரிசு மற்ற மனிதரிடம் அன்பினை வெளிப்படுத்த தவறுவதில்லை. வாரிசுகளின் கர்மம், அடுத்தவரிடம் அன்பை வெளிப்படுத்துவதாகிறது! அவரின் கர்மங்களின் மீது ஈன்றவனுக்கு அதிகாரம் இல்லையெனில் அதன்மீது ஆசை மோகம் கொள்வது எவ்வாறு நியாயமாகும். இது பற்றி மேலும் ஆழமாய் சிந்தித்தால் அதிவிரைவாக ஒன்று விளங்கும். இந்த புவி வாழ்வில் ஆசையும் விருப்பமும் கொள்ள வேண்டிய எதுவும் இல்லை என்ற உண்மையின் தெளிவு பிறக்கும் . ஸ்ருஷ்டியே பரமாத்மாவானால், மானிடர் அந்த பரமாத்மாவின் அங்கமானால், அணுவும் அசைவது அவனால் என்ற உண்மையும், ஆத்மாவான மனிதன் ஏதும் இல்லை என்பதும் விளங்கும். இதுவே கர்மயோகத்தின் மூல சித்தாந்தம் பார்த்தா...!

Mahabharatham....

கிருஷ்ணன்:- உ ன்னுடைய ரதம் சித்தமாய் உள்ளது பார்த்தா! ரதம் செலுத்தும் சாரதியாக நானும் சித்தமாய் உள்ளேன்!
அர்ஜூனன்:- அது தவறு மாதவா! தாம் எமக்கு சாரதியாய் வருவது தவறு!
கிருஷ்ணன்:- என்மீது உனக்கு நம்பிக்கை இல்லையா? ரதம் செலுத்துவதில் வல்லவன் நான்!
அர்ஜூனன்:- இல்லை மாதவா! தாம் மகிமை வாய்ந்தவர். எமக்கு தாழ்வாக தமது ஸ்தானம் இருத்தலாகாது!
கிருஷ்ணன்:- உயர்வு தாழ்வு பற்றி பேசுவதில் தாத்பரியம் என்ன உள்ளது? இருப்பினும் ஒன்றுரைக்கின்றேன், தாழ்வாக அமர்ந்திருந்தே உயர்வாக உன்னை வழி நடத்துவேன்! என் கரத்தில் இருப்பது ரதக்குதிரையின் கடிவாளம் மட்டுமல்ல உன் மனக்குதிரையின் கடிவாளமும் என் கரத்தில் உள்ளது! சத்திய அசத்திய, தர்ம அதர்மத்திற்கிடையே உன்னுடைய மனமானது துவல நேரும் போதெல்லாம், நீ உன் பலத்தினை இழந்து வாடும் போதெல்லாம் உன்னை நல்வழிபடுத்த நான் முயல்வேன்! யுத்தத்தின் ரதத்தையும் மனித வாழ்வின் ரதத்தையும் நல்வழி செலுத்தும் பார்த்த சாரதி நான்...!

பூனையால் இறந்த கழுகு

பூனையால் இறந்த கழுகு
.
ஒரு மலையில் ஒரு அத்திமரம் இருந்தது. அந்த மரத்தில் இருந்த ஒரு பொந்தில் ஒரு முதிய கழுகு வசித்து வந்தது.. கண்பார்வையும் குறைந்துவிட்டது. அதனால் அந்தக் கழுகுக்கு மற்ற பறவைகள் தங்களின் உணவினைச் சிறிதளவு அளித்துவந்தன.

பிரதிபலனாக அந்தப் பறவைகள் இரைதேடி வெளியில் செல்லும்போதெல்லாம் அவற்றின் குஞ்சுகளை பத்திரமாகப் பார்த்துக்கொண்டு இருந்துவந்தது.

ஒருநாள் பூனை ஒன்று அந்தப் பக்கம் வந்தது. அப்போது அந்த அத்திமரத்திலிருந்த பறவைக் குஞ்சுகளின் கீச்சுக்குரல்களைக் கேட்டது. ‘ஆகா இன்று நமக்கு நல்ல வேட்டை’ என்று நினைத்து, அந்த மரத்தில் ஏறியது.

பூனை வருவதைப் பார்த்த குஞ்சுகள் அதிகமாக ஒலியெழுப்பின. ‘இவை ஏன் இப்படிக் கத்துகின்றன?’ என்று நினைத்த கழுகு தன் வெளியே வந்தது.

கழுகு வருவதைப் பார்த்த பூனை உடனே அந்தக் குஞ்சுகளைப் பார்த்து, ஏன் இப்படி பயப்படுகிறீர்கள்? என்னைத் தெரியவில்லையா?’ என்று தந்திரமாகப் பேசியது.

பின் கோபத்துடன் தன்னை முறைத்துப் பார்த்த கழுகிடம், ‘கழுகு நண்பா என்னைப் பார்த்ததும் இந்தக் குஞ்சுகள் ஏன் இப்படிக் கத்துகின்றன? நீங்களாவது இவற்றுக்கு தைரியம் சொல்லக்கூடாதா என்று நல்லவனைப் போலக் கேட்டது.

கழுகு, பூனையைப் பார்த்து, நீ இப்போதே மரத்தைவிட்டுக் கீழே இறங்கிவிடு. இல்லையென்றால், உன்னைக் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டியது.

நண்பா, கோபப்படாதீர்! முதலில் என்னைப் பற்றி நான் கூறுவதைக் கேளுங்கள். . நான் உங்களின் எதிரி இனம் என்பதாலேயே என்னைக் கொல்ல நினைப்பது சரியல்ல.

நான் உங்களுடன் நட்புகொள்ளவே இங்குவந்தேன்’ என்றது அந்தத் திருட்டுப் பூனை. பூனையின் திருட்டு முழியைப் பார்த்த கழுகு, அதன் வார்த்தைகளை நம்பவில்லை.

வயதில் முதிய உங்களுடன் தங்கியிருந்து நல்ல அறிவுரைகளைக் கேட்டு வாழ்வதற்காகவே நான் உங்களைத் தேடி வந்தேன்’ என்று நயமாகப் பேசியது. கழுகு யோசித்தது. .

ஆனால் கழுகு, ‘நீ மாமிசம் உண்பவன். உன்னை எப்படி இந்த இடத்தில் வைத்துக்கொள்வது?’ என்று பூனையிடம் கேட்டது.

பூனை, ‘நான் தரும சாஸ்திரங்களைப் படிப்பவன். கொலைசெய்வது பெரிய பாவம் என்று அவை கூறியுள்ளன. . எவன் ஒருவன் மற்றவரைக் கொன்று சுகமடைகின்றானோ அவன் நாசத்தையே அடைவான். நான் இப்போது இந்தக் காட்டிலிருக்கும் காய், கனிகளை மட்டுமே உண்பவன். சுத்த சைவம்’ என்று கூறியது.

இதனால் கழுகுக்கு அந்தத் திருட்டுப் பூனையின்மீது நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. தான் மரக்கிளைகளில் தங்கிக்கொள்ள அனுமதித்தது.

அதன்பின் பூனை தனது வஞ்சக திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியது. நாள்தோறும் மிக ரகசியமாக ஒவ்வொரு குஞ்சாகப் பிடித்துச் சாப்பிட்டு சந்தோஷமாக இருந்தது.

ஆனால், தங்களுடைய குஞ்சுகளின் எண்ணிக்கை நாள்தோறும் குறைந்து வருவதனை அறிந்த பறவைகள் பூனையின் மீதும் கழுகின் மீதும் சந்தேகப்பட்டன. பறவைகள் சந்தேகப்படுவதை அறிந்த பூனை ஒருநாள் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவானது.

கழுகின் மீது சந்தேகப்பட்ட பறவைகள், ஒருநாள் கழுகின் பொந்தினைச் சோதனையிட்டன. அப்பொந்தில் தங்களுடைய குஞ்சுகளின் இறகுகளும், எலும்புத்துண்டுளும் இருப்பதனைக் கண்டு கோபங்கொண்டன.

கழுகுதான் இத்தனை நாட்களாக தங்களது குஞ்சுகளைத் திருட்டுத்தனமாகத் தின்றுள்ளது என்று நினைத்து, அத்தனைப் பறவைகளும் கழுகின்மீது பாய்ந்து அதனைக் கொத்திக் கொத்திக் கொன்றன.

ஆதலால், ஒருவனுடைய குணம் தெரியாமல் அவனுக்கு இடம்கொடுப்பது துன்பத்தில் முடியும்’ என்றது காகம்.
.
.
அந்த காகத்தின் கதையை நாளைக்கு சொல்கிறேன்