.
ஒரு மலையில் ஒரு அத்திமரம் இருந்தது. அந்த மரத்தில் இருந்த ஒரு பொந்தில் ஒரு முதிய கழுகு வசித்து வந்தது.. கண்பார்வையும் குறைந்துவிட்டது. அதனால் அந்தக் கழுகுக்கு மற்ற பறவைகள் தங்களின் உணவினைச் சிறிதளவு அளித்துவந்தன.
பிரதிபலனாக அந்தப் பறவைகள் இரைதேடி வெளியில் செல்லும்போதெல்லாம் அவற்றின் குஞ்சுகளை பத்திரமாகப் பார்த்துக்கொண்டு இருந்துவந்தது.
ஒருநாள் பூனை ஒன்று அந்தப் பக்கம் வந்தது. அப்போது அந்த அத்திமரத்திலிருந்த பறவைக் குஞ்சுகளின் கீச்சுக்குரல்களைக் கேட்டது. ‘ஆகா இன்று நமக்கு நல்ல வேட்டை’ என்று நினைத்து, அந்த மரத்தில் ஏறியது.
பூனை வருவதைப் பார்த்த குஞ்சுகள் அதிகமாக ஒலியெழுப்பின. ‘இவை ஏன் இப்படிக் கத்துகின்றன?’ என்று நினைத்த கழுகு தன் வெளியே வந்தது.
கழுகு வருவதைப் பார்த்த பூனை உடனே அந்தக் குஞ்சுகளைப் பார்த்து, ஏன் இப்படி பயப்படுகிறீர்கள்? என்னைத் தெரியவில்லையா?’ என்று தந்திரமாகப் பேசியது.
பின் கோபத்துடன் தன்னை முறைத்துப் பார்த்த கழுகிடம், ‘கழுகு நண்பா என்னைப் பார்த்ததும் இந்தக் குஞ்சுகள் ஏன் இப்படிக் கத்துகின்றன? நீங்களாவது இவற்றுக்கு தைரியம் சொல்லக்கூடாதா என்று நல்லவனைப் போலக் கேட்டது.
கழுகு, பூனையைப் பார்த்து, நீ இப்போதே மரத்தைவிட்டுக் கீழே இறங்கிவிடு. இல்லையென்றால், உன்னைக் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டியது.
நண்பா, கோபப்படாதீர்! முதலில் என்னைப் பற்றி நான் கூறுவதைக் கேளுங்கள். . நான் உங்களின் எதிரி இனம் என்பதாலேயே என்னைக் கொல்ல நினைப்பது சரியல்ல.
நான் உங்களுடன் நட்புகொள்ளவே இங்குவந்தேன்’ என்றது அந்தத் திருட்டுப் பூனை. பூனையின் திருட்டு முழியைப் பார்த்த கழுகு, அதன் வார்த்தைகளை நம்பவில்லை.
வயதில் முதிய உங்களுடன் தங்கியிருந்து நல்ல அறிவுரைகளைக் கேட்டு வாழ்வதற்காகவே நான் உங்களைத் தேடி வந்தேன்’ என்று நயமாகப் பேசியது. கழுகு யோசித்தது. .
ஆனால் கழுகு, ‘நீ மாமிசம் உண்பவன். உன்னை எப்படி இந்த இடத்தில் வைத்துக்கொள்வது?’ என்று பூனையிடம் கேட்டது.
பூனை, ‘நான் தரும சாஸ்திரங்களைப் படிப்பவன். கொலைசெய்வது பெரிய பாவம் என்று அவை கூறியுள்ளன. . எவன் ஒருவன் மற்றவரைக் கொன்று சுகமடைகின்றானோ அவன் நாசத்தையே அடைவான். நான் இப்போது இந்தக் காட்டிலிருக்கும் காய், கனிகளை மட்டுமே உண்பவன். சுத்த சைவம்’ என்று கூறியது.
இதனால் கழுகுக்கு அந்தத் திருட்டுப் பூனையின்மீது நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. தான் மரக்கிளைகளில் தங்கிக்கொள்ள அனுமதித்தது.
அதன்பின் பூனை தனது வஞ்சக திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியது. நாள்தோறும் மிக ரகசியமாக ஒவ்வொரு குஞ்சாகப் பிடித்துச் சாப்பிட்டு சந்தோஷமாக இருந்தது.
ஆனால், தங்களுடைய குஞ்சுகளின் எண்ணிக்கை நாள்தோறும் குறைந்து வருவதனை அறிந்த பறவைகள் பூனையின் மீதும் கழுகின் மீதும் சந்தேகப்பட்டன. பறவைகள் சந்தேகப்படுவதை அறிந்த பூனை ஒருநாள் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவானது.
கழுகின் மீது சந்தேகப்பட்ட பறவைகள், ஒருநாள் கழுகின் பொந்தினைச் சோதனையிட்டன. அப்பொந்தில் தங்களுடைய குஞ்சுகளின் இறகுகளும், எலும்புத்துண்டுளும் இருப்பதனைக் கண்டு கோபங்கொண்டன.
கழுகுதான் இத்தனை நாட்களாக தங்களது குஞ்சுகளைத் திருட்டுத்தனமாகத் தின்றுள்ளது என்று நினைத்து, அத்தனைப் பறவைகளும் கழுகின்மீது பாய்ந்து அதனைக் கொத்திக் கொத்திக் கொன்றன.
ஆதலால், ஒருவனுடைய குணம் தெரியாமல் அவனுக்கு இடம்கொடுப்பது துன்பத்தில் முடியும்’ என்றது காகம்.
.
.
அந்த காகத்தின் கதையை நாளைக்கு சொல்கிறேன்
No comments:
Post a Comment