Saturday, October 3, 2015

நரியால் மான் பட்ட துன்பம். என்னவென்று காகம் சொன்னது.

நரியால் மான் பட்ட துன்பம். என்னவென்று காகம் சொன்னது.
.
மகதநாட்டில் உள்ள சண்பகவனத்தில் காகமும் ஒரு மானும் நட்பாக இருந்தன. மான் அந்தக் காட்டில் இருந்த நல்ல புற்களை நாள்தோறும் சாப்பிட்டு மற்ற மான்களைவிட வளமாக கொழுத்துப் பெருத்திருந்தது.
.
அப்படிக் கொழுத்துப் பெருத்திருந்த மானைத் தந்திரமாக வேட்டையாடி உண்டுவிடவேண்டும் என்று அதே காட்டில் வசித்த சம்புகன் என்கிற சிறு நரி ஒன்று திட்டமிட்டது.
.
ஒருநாள் புற்களை மேய்ந்துகொண்டிருந்த மானிடம் நெருங்கிவந்த நரி, ‘நண்பா நலமா?’ என்று கேட்டது. நரியைப் பார்த்து மெருண்ட மான், அது சிறிய நரி என்பதால் அதிகமாக பயப்படாமல், ‘நீ யார்? உன்னை இந்தக் காட்டில் நான் பார்த்ததில்லையே என்றது. ‘
.
நான் இந்தக் காட்டில் யாருடைய நட்பும் இன்றித் தனித்துத் திரிகின்றேன். உன்னைப் பார்த்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உனக்கு உதவிசெய்துகொண்டு உன்னுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன்’ என்று வஞ்சகமாகப் பேசியது நரி.
.
நரியின் வார்த்தையை நம்பிய மான், அதனுடன் நட்புகொண்டது. மாலையில், இருவரும் ஒரு மரத்தடியில் வந்து நின்றனர். அப்போது அந்த மரத்திலிருந்த காகம், ‘என்ன நண்பா! உன் அருகில் இருக்கும் புதியவர் யார்?’ என்று விசாரித்தது
.
‘இவன் பெயர் சம்புகன். இவன் என்னுடைய புதிய நண்பன்’ என்றது மான்.
.
‘நண்பா நீ வெள்ளைமனம் படைத்தவன். வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்துவிடாதே முன்பின் தெரியாதவனை உன் நண்பனாக ஏற்றுக்கொள்ளாதே அவனைப் பற்றி ஒன்றுமே தெரியாமல், அவனது நடத்தையைப் பற்றி ஏதும் அறியாமல், நீ அவனுக்கு உன் அருகில் இடம்கொடுத்தால், பூனைக்கு இடம் கொடுத்து இறந்த கழுகைப் போல் நீயும் இறந்துவிடுவாய்’ என்று கூறி மானை எச்சரித்தது காகம்.
.
காகத்தின் கருத்தினைக் கேட்டுக்கொண்ட மான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தது.
.
உடனே, நரி ‘ஒருவனுடைய குணத்தை எப்படி அவனுடன் நட்புகொள்வதற்கு முன்பே அறிந்துகொள்ளமுடியும்? அதுவும் தவிர, நல்லவர்களுக்கு அது ஒத்துவராது. நல்லவர்களைப் பார்த்தவுடனேயே அவர்களுடன் நட்புகொள்ளலாம்’ என்றது.

நரியின் நயமான வார்த்தைகளை நம்பிய மான், காகத்தைப் பார்த்து ‘நீ எனக்கு எப்படி நல்ல நண்பனோ அதுபோலவே இந்த நரியும் இனி எனக்கு நல்ல நண்பன்’ என்று திட்டவட்டமாகக் கூறியது. அதன் பின்னர் மான், நரி, காகம் ஆகிய மூன்றும் ஒன்றாகவே இருந்தன. நாட்கள் கழிந்தன.
.
எப்படியாவது அந்தக் கொழுத்த மானை வேட்டையாடிவிடவேண்டும் என்று நினைத்த நரி, ‘நண்பா நான் இந்தக் காட்டில் செழிப்பான பயிர்கள் விளைந்திருக்கும் ஒரு பகுதியைக் கண்டேன்.’ என்று மானிடம் ஆசை வார்த்தை கூறியது.
.
அப்படியா நண்பா இதுவரை நான் அந்தப் பகுதியைப் பார்த்ததில்லையே என்றது மான். நரி, ‘என்னுடன் வா நண்பா நான் உனக்கு அந்தப் பகுதியைக் காட்டுகிறேன். வஞ்சகமாகக் கூறியது.நரி
.
நரியின் வார்த்தைகளை நம்பி, அதன் பின்னே சென்றது அந்த மான். நரி காட்டிய அந்தப் பகுதி, காட்டில் வசித்து வரும் ஒரு விவசாயியின் தோட்டம். அதில் அவன் நல்ல பயிர்களைச் செழிப்பாக வளர்த்துவந்தான்.
.
நரியின் யோசனையால் அந்தத் தோட்டத்துக்குள் புகுந்த மான் தன் வயிறு நிறைய உண்டது. அதன் பிறகு நாள்தோறும் நரியுடன் வந்த மான் அந்தப் பயிர்களை திருப்தியாகச் சாப்பிட்டு காலம் கழித்தது.
.
தன் தோட்டத்தில் பயிர்கள் குறைவதைக் கண்ட விவசாயி, இதைக் கண்டுபிடிப்பதற்காக ஒருநாள் மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்தான். அவன் அப்படி ஒளிந்திருந்ததை நரி பார்த்துவிட்டது. ஆனால், அது மானிடம் சொல்லவில்லை....
.
இதனால் அந்த மான் என்ன ஆனது என்று அடுத்து சொல்கிறேன்

No comments: