Monday, August 31, 2015

Different between villages and cities...

கிராமமும் நகரமும்..

வெற்றிலை_பாக்கு போட்டால் கிராமத்தான் பீடா போட்டால் நகரத்தான்..

பச்சை குத்தினால் கிராமத்தான் டாட்டூ போட்டு கொண்டால் நகரத்தான்..

மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம் மெஹந்தி என்றால் நகரம் ..

மஞ்சள் தண்ணீர் ஊத்தினால் கிராமம் Chemical பொடி தூவினால் நகரம் ..

90களில் மஞ்ச பச்சை சட்டை போட்டா அவன் கிராமம் 2015ல் மஞ்சள் பச்சை சட்டை போட்டால் நகரம்..

மங்களமான மஞ்சப்பை என்றால் கிராமம் மண்ணை மலடாக்கும் பாலித்தீன் என்றால் நகரம்..

கிழிந்த ஆடை போட்டால் கிராமம் நல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம்..

உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம் உடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம்..

கோடு போட்ட அண்டர் வேர் தெரிந்தால் அவன் கிராமம் இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் அணிந்தால் அவன் நகரம்..

எது நாகரீகம் எது ஆரோக்கியம்.?? —

No comments: