Thursday, August 13, 2015

Super comedy ha ha ha Aathu....

Blade Hotel.
Sever:வாங்க சார்.என்ன சாப்புடுரீங்க?
Customer: தோசை.
Sever:சாதா தோசையா?வெங்காய தோசையா?
Customer:வெங்காய தோசை.
Server:சின்ன வெங்காயம் போட்டதா?பெரிய வெங்காயம் போட்டதா?
Customer:சின்ன வெங்காயம்.
Server:சாதா வெங்காயமா?நாட்டு வெங்காயமா?
Customer:நாட்டுவெங்காயம்.
Server:சின்னதா நறுக்கியதா?பெருசா நறுக்கியதா?
Customer:சின்னதா நறுக்கியது.
Server:வெங்காயம் அதிகமா போடவா?கம்மியா போடவா?
Customer:அதிகமா
Server:வெங்காயத்த கழுவி போடவா?தொடச்சு போடவா?
Customer:கழுவி போடு
Server:நல்லா வேகணுமா?கம்மியா வேகணுமா?
Customer:நல்லா வேகணும்
Server:நெய் ஊத்தவா?எண்ணெய் ஊத்தவா?
Customer:நெய்
Server:பாக்கெட் நெய்யா? சாதா நெய்யா?
Customer:பாக்கெட் நெய். தம்பி போதும் பா.டிபன் எடுத்துட்டு வா.
Server:சரி சார் இருங்க கொண்டு வாறேன்.
  (சாப்பிட்ட  பிறகு)
Sever:இந்தாங்க சார் பில். மொத்தம் 50 ரூபா
Customer:கேஷா வேணுமா? செக்கா வேணுமா ?
Sever:கேஷ்
Customer:சில்லரையா வேணுமா? நோட்டா வேணுமா?
Server:நோட்டா வேணும்
Customer:பழைய நோட்டா? புதிய நோட்டா?
Server:புதிய நோட்டு
Customer:காந்தி படம் போட்டதா?போடாததா?
Server:காந்தி படம் போட்டது
Customer:காந்தி படத்துல கண்ணாடி போட்டதா?போடாததா?
Server:கண்ணாடி போட்டது
Customer:கருப்பு கண்ணாடி போட்டாதா?சாதா கண்ணாடி போட்டதா?
Server:சாதா  கண்ணாடி
Customer:கண்ணாடில ஓட்டை விழுந்ததா? விழாததா?
Server:சார்ர்ர்ர்ர்.என்னை  மன்னிச்சுக்கோங்க. தெரியாம வாய கொடுத்திட்டேன். நீங்க. போங்க. சார்  உங்க. பில்ல நானே  கட்டிக்கறேன்
Customer:மவனே  அது ..

No comments: