Tuesday, September 29, 2015

வெங்காயம் -- எதனுடன் சேர்த்தால் நோய் நீக்கும் மருந்தாக மாறும் - தீரும் நோய்கள் என்ன.?

வெங்காயம் -- எதனுடன் சேர்த்தால் நோய் நீக்கும் மருந்தாக மாறும் - தீரும் நோய்கள் என்ன.?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள நேரத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.


Wednesday, September 23, 2015

iPod ஐயும் Android ஐயும் தின்னமுடியாது ! Windows ஐயும் Vista வையும் உண்ணமுடியாது !

நிலங்கள் வீடு ஆயின !
களங்கள் காடு ஆயின !!
விவசாயி விண்ணோடு போகிறான் !
விவசாயம் மண்ணோடு போகிறது.....!!

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்,
இருநூறு ஆண்டு !
இனி, உணவிற்காக பிச்சை எடுக்கப்போகிறோம் !! எத்தனை ஆண்டுகளுக்கோ ?.....

பல கிராமங்களில் பலரைக் காணோம் !   
பல இடங்களில் கிராமங்களைக் காணோம் !! 🏡🏡
பூமி, யாரையும் கைவிடாதத் தாயானவள், இன்று
யாவராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....

சிற்பங்கள் அழிந்துவிட்டால்,
கோயிலுக்கு சிறப்பில்லை !
சிற்பிகளே அழிந்துவிட்டால்,
கோயிலுக்கே பிறப்பில்லை.....!!

விவசாயி அழிந்துவிட்டால்,
உண்ணக்கூட வழியில்லை !
விவசாயம் அழிந்துவிட்டால்,
வருந்தியப் பின் பயனில்லை.....!!

நிதிநிலை அறிக்கையில்,
அரசின் அறிவின்மை !
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி !!
நாம் வாழ நாலாயிரம் கோடி.....!!!

கரும் மேகங்கள் காணவில்லை !
கால் நடைகள் பேனப்படவில்லை !!
நாளை வரும் பசி போக்க,
நாகரிகம் உதவவில்லை.....!!!

ஏறு போன நிலங்கள் !
இன்று கூறு போன மனைகள் !!
பருப்பு கொடுத்த சோலைகள், இன்று !
செருப்புத் தொழிற்சாலைகள்.....!!  🏭

நிலத்தை விற்ற பணத்தை போட்டால்,
வங்கி பணம் வட்டி தரும் ! 
வாய்ப் பசிக்கு ரொட்டி தருமா ?.....
பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால், அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேய்த்து விவசாயிகளாகி இருப்பார்கள்.....

iPod ஐயும் Android ஐயும் தின்னமுடியாது !
Windows ஐயும் Vista வையும் உண்ண முடியாது !
மதுவை மட்டும் தாகத்திற்கு குடிக்க முடியாது !
பசிக்காதது போல் பல நாட்கள் நடிக்க முடியாது.....
விஞ்ஞான வளர்ச்சியில, வசதிகள் வரும்.
வயிறு நிரம்புமா.....?

விவசாயத்தினைத் துறந்த நாடும்,
விவசாயியை மறந்த நாடும்
உருப்படவே முடியாது -
- உண்மை இன்று புரியாது.

விவசாயத்தினை நேசித்தால் பகிருங்கள்......🌿🌾🍀🌾🌾🏃🏇 🐓 🐺 🐃🐂🌴🌳

இன்றைய தாங்கமுடியாத கடிகள்

இன்றைய தாங்கமுடியாத கடிகள்
=======================
ஒருவன் 2 நீச்சல் குளங்களை கட்டினான். ஒரு குளத்தில் தண்ணீர் நிரப்பாமலே விட்டான். ஏன்னு கேட்டதற்கு...
அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா என்றான்😄😁😄
-------------------------
மாடு போல சின்னதா இருக்கும்...! ஆனா அது மாடு இல்ல...!
அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி!
கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?👔💥😏
---------------------------
கோடீஸ்வரனாக ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லுங்களேன்
தெரிஞ்சா நான் ஏன்யா நீங்க கொடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு உக்காந்து ஜோசியம் பாக்கறேன்?😁😁😁😄😄😄
---------------------------
டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?😁😁😁
---------------------------
தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் 
என்னன்னு தெரியுமா...?
தெரியலையே.... என்னது?
தலையிலே முடி இருக்கிறது தான்...!😁😁😁😁
---------------------------
செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.
செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது
😂😂😂😇
---------------------------
ஏன்.... தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க தெரியுமா...!
கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடும்ல..!
😴😴😬😬😡😡
---------------------------
டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க..!
சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?
👵👵👵😄😄😄
---------------------------
ராத்திரியில சூரியன் எங்கே போகுது?...
எங்கேயும் போகல...., இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை!.
😬😬😇😇
---------------------------
கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு!
டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு!
😜😜😜
---------------------------
சோப் டப்பாலே ஏன் சின்ன சின்ன ஓட்டையா போட்டுருக்காங்க?
ஏன்னா, பெரிய ஓட்டை போட்டா சோப் கீழ விழுந்துடும்!
😜😜😜😜
---------------------------
உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?
ஓட்டுவீடு, அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... 'தங்க' வீடெல்லாம் கிடையாது.

PULI TRAILER 2....


Saturday, September 19, 2015

உங்கள் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கிறதா?

உங்கள் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கிறதா?
குழந்தையின் வளர்ச்சி என்பதைப் பெரும்பாலான பெற்றோர் அதன் உயரம் மற்றும் எடையைவைத்துக் கணக்கிடுகின்றனர். கொழுகொழுவென இருந்தால், ‘ஆரோக்கியமாக இருக்கிறது’ என நினைத்துக்கொள்கின்றனர். இவை மட்டுமே, சரியான வளர்ச்சி எனக் கூறிவிட முடியாது. குழந்தை வளர்ச்சியில், அதன் ஒவ்வொரு காலகட்டமும் ஒவ்வொரு மைல் ஸ்டோன்.
மாதந்தோறும் வளர்ச்சி
முதல் இரண்டு மாதங்கள்
பிறந்த குழந்தைக்குக் கண் மங்கலாகத் தெரியும். சில இன்ச் தூரத்துக்கு மேல் சரியாகப் பார்க்க முடியாது. பிறந்த சில நாட்கள் தாய்ப்பால் குடிப்பது, தூங்குவது என்று இருக்கும் குழந்தை, கொஞ்சம் கொஞ்சமாகத் தாயின் குரல், முகம், அரவணைப்பை அடையாளம் காணக் கற்றுக்கொள்ளும். ஆறு வாரங்களுக்குப் பின், தாயின் முகத்தை அடையாளம் காணும்.
குழந்தை பிறந்த இரண்டு மாதங்களுக்குள் முகம் பார்த்துச் சிரிக்கும்; பேசுவதைக் கேட்கும்; அம்மாவின் குரல் கேட்டு அழுவதை நிறுத்தும். இது, முதல்கட்ட வளர்ச்சியின் ஆரம்பம். காது நன்றாகக் கேட்கிறது எனப் புரிந்துகொள்ளலாம்.
மூன்றாம் மாதம்
மூன்றாவது மாத முடிவில், குழந்தைக்குக் கழுத்து நிற்கும். அதற்கு முன்னர் தலை நிற்காமலே குப்புற விழுந்தால், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகலாம். எனவே, இந்தக் காலத்தில் குழந்தையைக் கண்காணிப்பது நல்லது.
4 - 5 மாதங்கள்
நான்காவது மாதத்தில், குழந்தை ‘மா’, ‘பா’ போன்ற சத்தங்களை ஏற்படுத்தும். ‘ஆஆஆ...’ என்று சத்தம் போட்டுச் சிரிக்கும். பேசுவதற்கு நாக்கைப் பயன்படுத்தத் தெரியாததால், சத்தம் மட்டும் தொண்டையில் இருந்து வரும்.
பொருட்களைக் கவனிக்கத் தொடங்கும். சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் போன்ற நிறங்கள் கொண்ட பொருட்களைக் காண்பிக்கலாம்.
ஐந்தாவது மாத முடிவில், தலைநின்ற குழந்தை குப்புற விழும்போது, தலையைத் தூக்கிக்கொள்ளும். இது குழந்தையின் முக்கியமான மைல்கல். காலில் கொலுசு மாட்டிவிடுவதால், சத்தம் வரும். அதனால், குழந்தைகள் அதிகமாகக் காலை ஆட்டும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.
6 - 7 மாதங்கள்
இப்போதுதான் குழந்தையால் தலையைத் தூக்கி மேலே பார்க்க முடியும்.
ஆறாவது மாத முடிவில், பிற பொருட்களைப் பிடித்தபடி உட்கார முடியும். கண்ணாடி பார்த்துச் சிரிக்கும், கண் பார்வை சரியாக இருப்பதை நம்மால் காண முடியும். சின்னச்சின்னப் பொருட்களை எடுக்க குழந்தை முயற்சிக்கும்.
குழந்தை, நாக்கைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளும். அப்போதுதான் குழந்தைக்கு ‘ங்கா...’ சொல்லத் தெரியும்.
8 - 11 மாதங்கள்
குழந்தைகள் நீந்துவார்கள். வயிறு தரையில் இருக்கும். கை, கால்களை மட்டும் அசைத்து நகர முடியும். இது தவழுதல் கிடையாது.
9-10 மாதங்களில், குழந்தைகள் முட்டி போடுவர். தவழவும் செய்வர். 9 மாதங்களுக்குப் பிறகு, இரண்டு விரல்களைப் பயன்படுத்தி, குழந்தைகளால் பேனாவை எடுக்க முடியும்.
‘மாமா’, ‘அம்மா’, ‘பாப்பா’, ‘நாநா’ போன்ற வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கும். ‘டாட்டா’, ‘பை பை’ சொல்லும்.
10-11 மாதங்களில், குழந்தை தானே நகர்ந்து, ஏதாவது ஒரு சப்போர்ட்டுடன் நிற்கும்.
ஒரு வயதுக்குப் பின்
ஒரு வயதில் நடக்கத் தொடங்கும். கையிலிருக்கும் பொருளைத் திரும்பக் கொடுக்கத் தெரியும். அதற்கு முன், எடுத்த பொருளை திரும்பக் கொடுக்கத் தெரியாது.
15-வது மாதத்தில், சம்பந்தமே இல்லாமல் குழந்தைகள் ஏதாவது பேசுவார்கள். அதாவது, ஒலி எழுப்புவார்கள். இதைக் ‘குதலை’ என்பார்கள்.
18-வது மாதத்தில், படிக்
கட்டில் ஒவ்வொரு காலாகச் சேர்த்துவைத்து மட்டுமே படி ஏறத் தெரியும்.
1 ½ - 2 வயது வரை, ‘தண்ணீர் கொடு’ எனத் தன் தேவையைக் கேட்கத் தெரியும். மூளையின் 90 சதவிகித வளர்ச்சி இரண்டு வயதிலேயே நடந்துவிடும்.
2 வயதுக்குப் பிறகு, பெரியவர்களைப் போல படிக்கட்டில் ஏறி, இறங்கத் தெரியும். முழுமையாகப் பேச முடியும். பேசுவது புரியும், அதன்படி செய்யவும் தொடங்கும். நல்லது சொல்லிக்கொடுப்பதை 2 வயதிலிருந்து தொடங்கலாம்.
3 வயதிலிருந்து ‘பார்த்தேன்... செய்தேன்’ என்ற புரிதல் இருக்கும். கதை கேட்டுக் கொள்ளத் தெரியும். தான் ஆணா, பெண்ணா என்பது தெரியும். ட்ரை சைக்கிள் ஓட்டத் தொடங்கும்
4 வயதுக்கு மேல் கதை சொல்லத் தெரியும். என்ன நடந்தது எனச் சொல்லத் தெரியும். அதற்கு முன்னர் எந்தச் சம்பவத்தையும் சொல்லி விளக்கத் தெரியாது.
5 வயதில் அனைத்தும் தெரியும். பேச்சு, கதை, விளையாட்டு போன்றவை புரியும்.
மைல்கல் கவனம்!
இதயம், சிறுநீரகம், மூளை, கல்லீரல் போன்ற உறுப்புகளில் பிரச்னை இருந்தால், குழந்தையின் எடை அதிகரிக்காது.
4 கிலோ உள்ள குழந்தை, திடீரென 10 கிலோ ஏறினாலோ, 2 கிலோ குறைந்தாலோ, குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பிப்பது முக்கியம்.
2 மாதக் குழந்தை முகம் பார்த்துச் சிரிக்கவில்லை; 6 மாதக் குழந்தை குப்புற விழவில்லை; தலை நிற்கவில்லை; 15 மாதங்கள் ஆன பிறகும் நடக்கவில்லை என்றால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி வளர்ச்சி இருக்காது. சில குழந்தைகளுக்கு சற்றே முன்பின் மாறுபடும்.
குழந்தை ஒல்லியாக இருக்கலாம். ஆனால், சரியான எடையுடன் இருக்கும்பட்சத்தில், அது பிரச்னை இல்லை.
குண்டுக் குழந்தைதான் ஆரோக்கியமான குழந்தை என நினைப்பது தவறு.
‘கியூப்ஸ்’ என்ற விளையாட்டுப் பொருளை அடுக்க 15-வது மாதத்தில்தான் குழந்தைக்குத் தெரியும். இதையே, 7 அடுக்காக அடுக்கிவைக்க, 2 வயதாகும். இதுவே, 10 அடுக்காக அடுக்கிவைக்க, மூன்று வயதாகலாம்.
குழந்தையை வாக்கர் இல்லாமல் இயல்பாக நடக்கவிடுவது நல்லது. வாக்கரில் குழந்தை வேகமாகச் சென்று முட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.
ஒன்பது மாதக் குழந்தைக்கு உணவைச் சாப்பிடத் தெரியும். அதனால், தட்டில் உணவைப் போட்டு குழந்தையிடம் கொடுத்துச் சாப்பிடக் கொடுப்பது நல்லது. ஊட்டிவிடுவதைத் தவிர்க்கவும்.
அம்மாவிடம் வளராத குழந்தைகள், 5-10 சதவிகிதம் வரை, தான் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக உணரும். எனவே, குழந்தைகளைத் தனிமையில் விடக் கூடாது. தனிமை உணர்வில் இருக்கும் குழந்தைகள், பேசுவதற்குத் தாமதமாகலாம். கை சூப்பும் பழக்கமும் ஏற்படலாம்.
ஊட்டச்சத்து குறைபாடு…கவனம்!
உணவு, ஊட்டச்சத்து குறைந்தால், உடல் மற்றும் மூளை வளர்ச்சி தாமதமாகும்; பாதிப்புகளும் ஏற்படலாம்.
நாளாமில்லாச் சுரப்பிகள் பிரச்னை இருந்தாலும், வளர்ச்சி சீராக இருக்காது.
தைராய்டு சுரப்பி குறைந்திருந்தால், குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். தைராய்டு மாத்திரைகளைச் சாப்பிட்டு, குழந்தையை நார்மலாக வளர்க்க முடியும்.
குழந்தை பிறந்த பின், மூன்று நான்கு நாட்களுக்குள் தைராய்டு டெஸ்ட் செய்துகொள்வது நல்லது.
குழந்தைகளுக்கான உணவு
இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது. முதல் ஆறு மாத காலம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஏழாவது மாதத்தில் இருந்து, திட உணவுகளைச் சிறிது சிறிதாகக் கொடுக்கலாம். ஆனால், அவசியம் ஓர் ஆண்டாவது குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்ட வேண்டும்.
பசும்பால் கொடுத்தால், ஒவ்வாமை வர வாய்ப்புகள் அதிகம். வயிற்றுப்போக்கு ஏற்படலாம். ஒரு வயதுக்குப் பின் பசும்பால் தரலாம். ஆனால், தண்ணீர் கலக்காமல் கொடுப்பது நல்லது. ஏனெனில், பசும்பாலில் 70 சதவிகிதம் நீர் உள்ளது. அசைவ உணவுகளை ஓர் ஆண்டுக்குப் பின் கொடுக்கலாம்.
முதல் வளர்ச்சி… தாயின் வயிற்றில்
குழந்தையின் வளர்ச்சி என்பது தாய் கருவுற்றிருக்கும்போதில் இருந்தே தொடங்குகிறது. குழந்தையின் மூளை மற்றும் உடல் வளர்ச்சி நிர்ணியிக்கப்படுவதும் தாயின் வயிற்றில் இருந்துதான். தம்பதியர் கருத்தரிக்கத் திட்டமிடும்போதே ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடுவது, குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்பு வளர்ச்சிக்கு உதவும். தண்டுவடம், கபாலம் சரியாக வளராமல் இருந்தால், இதை சரிசெய்ய ஃபோலிக் ஆசிட் மாத்திரை முக்கியமாகிறது. தாயின் மகிழ்ச்சியான மனநிலை மற்றும் ரத்தத்தில் இருந்து வரும் சத்துணவே, குழந்தைக்கு ஊட்டமாகக் கருவில் சேர்கிறது. இரண்டு செல்லாக இருக்கும் ஓர் உயிர், தாயின் வயிற்றில் இருந்து மூன்று கிலோ குழந்தையாக வெளிவருகிறது. எனவே, தாயின் ஆரோக்கியமே, குழந்தையின் ஆரோக்கியம்.
முதல் மூன்று மாதங்கள் (1-3) – உடல் உறுப்புகள் உருவாகும் காலம்
பெரும்பாலான பெண்களுக்கு, தாங்கள் கருவுற்றிருப்பது முதல் மாதத்திலேயே தெரியாது. இதயம், கல்லீரல், மூளை போன்ற முக்கிய உறுப்புகள் வளர்ச்சி அடைவது முதல் மூன்று மாத காலங்களில்தான். தாய் ஊட்டச்சத்து உணவுகளைச் சாப்பிடுவதால் மட்டுமே ஆரோக்கியமான குழந்தையை உருவாக்க முடியும்.
இரண்டாவது மூன்று மாதங்கள் (4-6) – குழந்தையின் உடல்வளர்ச்சி
தாயின் உடல் மற்றும் மனநிலையைப் பொறுத்தே குழந்தையின் வளர்ச்சியும் முடிவு செய்யப்படுகிறது. மகிழ்ச்சியான காலகட்டமாக அமைத்துக்கொள்வது நல்லது.
மூன்றாவது மூன்று மாதங்கள் (7-9) – குழந்தையின் எடை அதிகரித்தல்.
குழந்தை முழுமையாக வளர்ந்து இருக்கும். சரிபாதி ஊட்டச்சத்து, தாயிடமிருந்து குழந்தைக்குச் செல்லும். இந்தக் காலத்தில் கருவுற்றோர், எளிமையான வேலைகளைச் செய்யலாம். ஆனால், கடினமான உடல் உழைப்பு கூடாது. கர்ப்பிணிகள் ஓய்வு மற்றும் ஊட்டச்சத்து உணவுகளைக் கட்டாயமாக்குவது, குழந்தைக்கும் தாய்க்குமான ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.
வளர்ச்சிக்கான மைல்கற்கள்
1.சோஷியல் மைல்கல் – இன்ட்ராக்டிக் கெப்பாசிட்டி
2.மோட்டார் மைல்கல் - கை, கால் அசைத்தல்
3.கிராஸ் மோட்டார் மைல்கல் - எழுந்திருப்பது, நிற்பது, நடப்பது
4.பைன் மோட்டார் மைல்கல் – பொருளை எடுப்பது, கொடுப்பது
5. லாங்்வேஜ் மைல்கல் – பேசும் திறன், புரிதல் திறன்.

துளசியின் மருத்துவ பயன்கள்

துளசியின் மருத்துவ பயன்கள்
1.துளசி இலைகளைத் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் வாழ்நாள் முழுவதும் வராது.ஜிரண சக்தியும் புத்துணர்ச்சியும் துளசி இலைகள் மூலம் பெறலாம்.வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.நமது உடலுக்கான கிருமிநாசினியாக துளசியை உட்கொள்ளலாம்
2. துளசி இலையைப் போட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் நம்மை அண்டாது.
3.வியர்வை நாற்றத்தை தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்
.
4.துளசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மை போல அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் நாள்பட்ட சொறி , படை சிரங்குகள் கூட மறைந்துவிடும்.
5.துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வந்தால் சிறுநீ ர்க்கோளாறு மறையும் .
6.துளசி சாற்றுடன் எலுமிச்சசை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.
7.சுத்தமான மண்பானைத் தண்ணீரில் துளசி இலைகளை ஊறப்போட்டு அந்தத் தண்ணீரை குடித்து வந்தால் எந்த நோயும் அண்டாது .
8. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மைப் பல நோய் களிலிருந்து காக்கிறது .
9.வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலை சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும் ,
10.வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களைக் கட்டி வைத்தாலும் வீட்டை சுற்றிலும் துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள், பூச்சிகள், பாம்புகள் முதலியன வராது (இதனால்தான் வீடுகளில் துளசிமாடம் வைத்து துளசி செடிகளை வளர்க்கிறார்களோ !) -----நன்றி தினமணி
11 ஒரு நாளில் 20மணிநேரம் ஆக்ஸிஜனை வெளியிடும் துளசியை நாம் வீட்டில் வளர்க்க வேண்டும் .

Thursday, September 17, 2015

Don't waste your time..why read the story

அசோக மன்னர்
ஒரு விசித்திர கட்டளையைப்
பிறப்பித்தார்.""ஒரு ஆட்டுத் தலை, ஒரு
புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு
உடனே வேண்டும். ஏற்பாடு
செய்யுங்கள் அமைச்சரே,''
என்றார்.மன்னரின் கட்டளை அமைச்சரைத்
திகைக்க வைத்தது. எனினும் அரச
கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள்
நாலாபக்கமும் பறந்தனர்.
ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம்
இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது
கிடைத்து விட்டது. புலித் தலைக்கு அலைந்தனர்.
அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது.
அன்றுதான் அவன் ஒரு புலியை
வேட்டையாடியிருந்தான். மனிதத் தலைக்கு
எங்கே போவது? கடைசியில் சுடுகாட்டிற்குச்
சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக்
கொண்டு வந்து சேர்ந்தனர்மூன்ற
ையும் பார்த்த அசோக மன்னர் தன்
அமைச்சரிடம், ""இம்மூன்றையும் சந்தையில்
விற்றுப்பொருள் கொண்டு
வாருங்கள்.'' என்றார்.
மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச்
சென்றவன் திணறினான். ஆட்டுத்
தலை அதிகச் சிரமமின்றி விலை போனது. புலியின்
தலையை வாங்க ஆளில்லை. பலர் அதை
வேடிக்கைத் தான் பார்த்தனர். கடைசியில் ஒரு
வேட்டைப் பிரியரான பிரபு அதனை வாங்கித்
தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி
வைக்க எடுத்துப் போனான்.
மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம்
அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின்
வாங்கியது. ஒரு காசுக்கு கூட அதை
வாங்க யாரும் முன்வரவில்லை.
அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை
உடனே விலை போனதையும், புலித்தலை சற்றுச்
சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை
வாங்க ஆளில்லை என்பதையும்
தெரிவித்தார்.
இப்போது அசோக மன்னர் கூறினார்...
""பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர்
போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு
கூடப் பெறாது. இலவசமாகக் கூட
இதனை யாரும்
தொடமாட்டார்கள். இருந்தும்
இந்த உடம்பு உயிர் உள்ளபோது என்ன
ஆட்டம் ஆடுகிறது!

Wednesday, September 16, 2015

Double meaning joke....

புருஷன்:-
என்னடி இது இவ்ளோ லூசா இருக்கு?

பொண்டாட்டி:- எத்தனை நாளா யூஸ்
பண்றீங்க, லூஸ் ஆகாம இருக்குமா?

புருஷன்:- அதுக்குன்னு இப்படியா?
இவ்ளோ# ப்ரீயா உள்ள போகுதே..?

பொண்டாட்டி:- அது என்ன இரும்பா..
தோலு தானேங்க..
எத்தனை நாளைக்கு தான்
அப்படியே இருக்கும்..

புருஷன்:-
எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு..ஒழுங்கா உண்மைய
சொல்லு, என்னை தவிர வேற
யாராச்சும் போட்டாங்களா?

பொண்டாட்டி:-
ஒருத்தரா ரெண்டு பேரா, எத்தனை பேர
சொல்லுறது?

புருஷன்:- ஒ..நான் இல்லாதப்ப
இதெல்லாம் வேற நடக்குதா? யார்
யாரெல்லாம் போட்டுட்டு போனாங்க?

பொண்டாட்டி:- நேத்து சொல்ல சொல்ல
கேக்காம உங்க அண்ணன் போட்டாரு..

புருஷன்:- எனக்கு புடிக்காதுன்னு நீ
சொல்ல வேண்டியது தானே..நீ சொல்ல
மாட்டியே..

பொண்டாட்டி:- உங்க அண்ணன்
கேக்கும்போது நான்
எப்படி வேண்டாம்னு சொல்லுறது?
அப்புறம் கோவிச்சிப்பாரு..

புருஷன்:-
இப்போ சமாளிப்பியே..சரி அப்புறம்
வேற யாரு போட்டா?

பொண்டாட்டி:- உங்க அப்பா நினைச்ச
நேரமெல்லாம் போடுவார்.

புருஷன்:- எங்க அப்பா வேர
போடுவாரா? அவர்கிட்டயும்
போடாதீங்கன்னு நீ சொல்ல மாட்டியா?

பொண்டாட்டி:- பெரியவர் அவர்..நான்
எப்படிங்க அவர்கிட்ட
போடாதீங்கன்னு சொல்லுறது..

புருஷன்:- எனக்கு பிடிக்காதுன்னு நீ
ஒரு தடவை சொல்லி இருந்தா அவர்
போடவே மாட்டார், தெரியுமா?

பொண்டாட்டி:-
ஒரு தடவை சொன்னேன், அதுக்கு, நான்
பெத்து வளத்த
பையனுக்கு சொந்தமானதா நான்
போடுவேன், நீ என்ன கேக்குறது,
வாயை மூடிக்கிட்டு 
இருன்னு 
சொல்லிட்டாருங்க..

புருஷன்:- ரெண்டு பேரும்
மாத்தி மாத்தி போட்டதுனால தான்
இவ்ளோ லூசா இருக்கு..

பொண்டாட்டி:- நீங்களே அவங்ககிட்ட
போட வேண்டாம்னு சொல்லிடுங்க..

புருஷன்:- 
உன்னை நம்பினா வேலைக்கு ஆகாது,
இனிமே என் செருப்பை வேற யாரும்
போட
கூடாதுன்னு நானே சொல்லிடறேன்
Ennama Ipidi Panrinagale ma....😜😜😜😜

No need email why read the story....

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரையை துடைத்து காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இன்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 ரூபாய் இருந்தது. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 ரூபாய் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.
வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இன்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!

நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகப் பெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...!

Monday, September 14, 2015

Enjoy the life

🍀 நெஞ்சை உருக்கிய கதை.

🍀  தலைப்பு:-  இன்னும் சில நாட்கள்.....

🍀  காலை நேரம்., அலுவலகத்திற்கு 
கிளம்பியாக வேண்டும் நான். 


🍀 செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். 
அய்யோ.... 
  
🍀  என்ன ஆயிற்று எனக்கு? 


🍀  நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?


 🍀 ஒரு நிமிடம் யோசிக்கிறேன்....


 🍀 நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.

🍀  காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? 
மணி பத்தாகிவிட்டது 

 🍀 என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். 
  
 🍀 அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். 

 🍀 அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்...... 


🍀  என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள்.
பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள். 
என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.

🍀  நான் இறக்கவில்லை.,
இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன். 

 🍀 ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை. 

🍀  என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தெரியவில்லை.


🍀  அய்யோ என்ன செய்வேன் நான்? 
எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்?


 🍀 நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். "நான் இறந்துவிட்டேனா?" நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா?


🍀   என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான்.
நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பிரிந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பரிவும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள். 
அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும்.
இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. 

🍀  அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான். 

 🍀 ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே.  அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன். 

🍀  "ஓ கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்" என் மனைவி அறையில் நுழைந்தாள். "நீ அழகாக இருக்கிறாய் "
என்று நான் கத்தினேன். நான் அவளால் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை.
உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை. 

🍀  "கடவுளே!" நான் கதறினேன். அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு, என் குழந்தையை கட்டி அணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க , என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்பொழுது நான் அழுதேன்!

 🍀 திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். "தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி.
ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். ..


🍀  என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. " இந்த பிரபஞ்சத்திலேயே நீ மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்றேன் முதன் முறையாக.
முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள்.  அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. 

🍀  இந்த இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி.
நண்பர்களே......


 🍀 இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது. உங்களது ஈகோவை புறம் தள்ளி விட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள்.


🍀  ஏனெனில் உங்களுது பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!!!  

பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.🙏

General knowledge with comedy...

பொது அறிவு .........!

1. இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும்,ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட நாடு...

2. தோசை கல்லு உள்ளே இருந்தால்உயர்தர ஹோட்டல்.. வெளியே இருந்தால் சாதா ஹோட்டல்..

3. வாக்கிங் போறது எளிதானது தான்... வாக்கிங் போக எந்திரிக்கிறது தான் கஸ்டமானது..

4. உலகத்துலயே ஸ்பீட் பிரேக் ஓரத்துல ஒரு பாதையை உருவாக்கி அதுல வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள தவிர யாருக்கும் வராது..

5. கீழே விழுந்ததும் அடிபடவில்லை என்பதை விட, யாரும் பார்க்கவில்லை என்பதே நிம்மதி..

6. மதம் மாறினால் தான் கடவுள் ஆசீர்வதிப்பார் என்றால் உண்மையில் அவர் கடவுள் இல்லை, கட்சித் தலைவர்..

7. ப்யூட்டி பார்லர் போன மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல ஃபீல் பன்னுவாங்க பெண்கள்.. ஜிம்முக்கு போன அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல் பன்னுவாங்க ஆண்கள்..

8. இந்த ஜெனரேஷன்ல ஆல்கஹாலுக்கு அடிமையானவன விட ஆன்ட்ராய்டுக்கு அடிமையானவன்தான் ஜாஸ்த்தி.

9. பால்விலை கூடுனது கூட கவலயா தெரில...டீக்கடைல டீ விலைய எப்ப கூட்ட போறாங்கேனுதான் திக் திக்குனு இருக்கு ... # டெய்லி நாலு டீ குடிப்போர் சங்கம

10. ஃபேஸ்புக் டுவிட்டர் பக்கமெல்லாம் வராதவர்கள் தன் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம

11. இப்பெல்லாம் ஏ.டி.எம்-இல் பணம் எடுத்தவுடன் பணத்தை எண்ணுவதற்கு முன்பு, இது எத்தனையாவது முறை பணம் எடுக்கிறோம் என்று தான் எண்ணுகிறோம

12. ATM - Anju Time Mattum (அஞ்சு டைம் மட்டும்)

13. குழந்தைங்க நம்மகிட்ட கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்.. இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க் செய்யல?'னு கேட்டா அதுங்களே கதைகதையா சொல்லுதுங்க..

14. கிணத்த தூர்வாருவோம்னு கெளம்புனாங்கெ!! இப்ப கெணத்தகாணோம்னு சொல்றாங்கெ!! இவனுகளே மண்ண போட்டு மெத்திருப்பானுகளோ!! # 300பேரின் சுவிஸ் பணம் மாயம்!!

15. காய்கறி விலை மளமளவென உயர்ந்துவரும் நிலையில், கீரை விலை ஏறாமல் சில்லறயில் கிடைப்பது, நம் உடல் ஆரோக்கியத்துக்க ு கொடுக்கப்பட்டிருக்கும் கடைசி வாய்ப்பு..

16. ஆபிஸ் போற அன்னைக்குலாம் 9 மணி வரைக்கும் தூக்கம் வரும் சண்டே மட்டும் ஏழு மணிக்கு மேல வராது # விதி

17. பியூட்டி பார்லர்க்கும் ஃபுல்லா மேக்அப் போட்டு தான் போகனுமா? என்னம்மா இப்படி பண்றிங்களேமா

18. தூய்மை இந்தியாதிட்டம்!! தேவையான பொருட்கள்: வெளக்கமாறு 1 கேமரா 4

19. மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு... # அப்டியே நெட் கட்டணத்தயும் உயர்த்தகூடாதுன்னு உத்தரவு போட்ருங்கயா....

20. உங்களுக்கு துன்பம் வருகையில் ..உங்கள் சொந்தங்களும் ..நண்பர்களும் ..உங்களுக்கு. பின் நிற்பார்கள் .....                  
சந்தேகம் இருந்தால்...உங்கள் திருமண ஆல்பத்தை பாருங்கள் ....

Our management same like this...

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு… என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு…

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..

கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது…

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது…

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை… அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது…

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்…

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது…

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்…

நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்….

கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே …???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு….

# நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது.
*************************
படித்ததில் பிடித்தது
*************************

The dog story...

குமாருக்கு அந்த நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது

அது அவன் மனைவி வளர்க்கும் நாய்.

ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய்,
இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில்
விட்டுவிட்டு வந்தான் குமார் . ஆச்சர்யம்..!
அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்..!!

கடுப்பான குமார்,
அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த
ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள்
வழியாக வீடு திரும்பினான். மறுபடியும் ஆச்சர்யம்… வீட்டில் நாய்..!!

மூன்றாம் நாள்…
காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன்,
காரை எங்கெங்கோ செலுத்தினான்.

வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான்.
ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான்.
இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான்.
இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு,
வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டுபுறப்பட்டான்.

வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து,
உன் நாய், வீட்டில் இருக்கிறதா..? என்று கேட்டான்.
இருக்கிறதே..! ஏன் கேட்கிறீர்கள்..? என்றாள் அவள்.

அந்த சனியன்கிட்டே போனைக் கொடு..!!
வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு.. 😆😂😆😂😆😂😆😂😆😂😆😂😆😂😆😂😆😂😆😂😂😂😂😂

Saturday, September 12, 2015

கற்றாழை மருத்துவ குணங்கள் ....

கற்றாழை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டையான சதைப் பற்றுள்ள இலைகளை கொண்ட ஒரு செடி தான். அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளம். அதனால் அது தலை முதல் கால் வரை பயன்படுகிறது. அது மட்டுமா என்ன, நம் உடலின் உட்புறமும் கூட பயன்படுகிறது.

பன்முக செயல்திறனைக் கொண்ட செடியாக விளங்கும் கற்றாழையை ஒரு சிறந்த வீட்டு சிகிச்சை மருந்தாக இந்தியா மட்டுமல்லாது, உலகமே ஏற்று கொண்டுள்ளது. நம் உடலின் உள்ளேயும், வெளியேயும் ஏற்பட்டுள்ள காயங்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் இதில் உள்ளதால், இதனை பலர் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது கற்றாழையால் ஏற்படும் உடல்நல பயன்களை பற்றிப் பார்ப்போமா!!!

வெட்டுக் காயங்கள்

கற்றாழையில் பாக்டீரியா எதிர்ப்பு குணங்களும், ஆன்டி-செப்டிக் குணங்களும் அதிகமாக உள்ளது. அதனால் வெட்டுக் காயங்கள், புண்கள், பூச்சிக் கடிகள் மற்றும் சிராய்ப்புகள் போன்றவற்றிற்கு இதனைப் பயன்படுத்தலாம்.

அதற்கு இந்த செடியின் உட்புறத்தில் உள்ள ஜெல் போன்ற பகுதியை காயம் பட்ட இடத்தில் தடவ வேண்டும். இது எரிச்சலை குறைத்து, பாக்டீரியாவை எதிர்த்து போராடவும் செய்யும்.

முகப்பருக்கள்

கற்றாழையின் குணப்படுத்தும் குணங்களால் பருக்களை நீக்க அதனை பயன்படுத்தலாம்.

மென்மையான சருமத்தை பெற பெண்கள் இன்னும் பல வழிகளை தேடி கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைத்த ஆர்கானிக் விடை தான் கற்றாழை. இருப்பினும் கற்றாழையை கொண்டு பருக்களை முழுமையாக நீக்க முடியாது. ஆனால் அழற்சியையும், சருமம் சிவந்திருப்பதையும் தடுக்கலாம். மேலும் பருக்கள் உடைவதையும் தடுக்கும். இருப்பினும் ஹார்மோன் சமமின்மையால் பருக்கள் ஏற்பட்டால், கண்டிப்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

சரும திசுக்களை புதுப்பிக்கும்

கற்றாழை குளிர்ச்சி ஏற்படுத்தும் செடியாக விளங்குவதால், எரிச்சல்கள் மற்றும் வெந்த புண்களுக்கு அதனை பயன்படுத்தலாம். இது சரும திசுக்களை வேகமாக சரிசெய்யும்.

இந்த அதிசய செடியில் குளிர்ச்சி ஏற்படுத்தும் குணம் உள்ளதால், அவை அணுக்களை புதுப்பிக்க உதவும். அதனால் பாதிப்படைந்த திசுக்கள் மீண்டும் சீரமைக்கப்படும்.

சரும நிற மாற்றத்தைத் தடுக்கும்

கற்றாழை சருமத்தை வெளுப்பாக்கும். அதனால் சூரிய கதிர்களால் ஏற்படும் சரும டான் மற்றும் நிறம் மாறுதல் போன்றவற்றிற்கு இதனை பயன்படுத்தலாம்.

சரும வறட்சியைத் தடுக்கும்

கற்றாழையின் ஜெல்லில் அதிகப்படியான ஈரப்பதம் அடங்கியுள்ளது. அதனால் அதனை சருமத்தில் தடவினால், சருமத்திற்கு நீர்ச்சத்து கிடைத்து, அதன் மீள்தன்மையை அதிகரிக்கும்.

கற்றாழை ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசராக விளங்கும். அதனை வீட்டிலேயே வளர்க்கவும் செய்யலாம்.

சரும சுருக்கம்

கற்றாழையின் ஜெல் சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை தடுப்பதில் சிறந்தது.

சரும நோய்கள்

கற்றாழை மிகப்பெரிய அலர்ஜி எதிர்பானாக விளங்குகிறது. அதனால் சருமத்தில் படை, சிரங்கு, அரிப்பு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

உடலினுள் ஏற்படும் அழற்சி

அழற்சிக்கு கற்றாழையை ஒரு நல்ல சிகிச்சை முறையாக பயன்படுத்தலாம். இது அசிடிட்டி, இரைப்பை அழற்சி, குடல் அல்சர் மற்றும் அழற்சிகளை குணமாக்கும்.

சரும அழற்சியை குணப்படுத்துவதை போலவே, உடலுக்குள் ஏற்பட்டுள்ள அழற்சியையும் கற்றாழை குணப்படுத்தும். செரிமான குழாய்களை அமைதிப்படுத்தும். சாப்பிட்ட பின் செரிமான அமைப்பை குளிர்ச்சியடைய வைக்க, இது ஒரு சிறந்த வழியாகும்.

நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கும்

இதில் பல வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்பாட்டில் வைத்து, நலமூக்கியாகவும், ஆன்டி-ஆக்ஸிடன்டாகவும் விளங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை தேவையான நேரத்தில் அதிகரித்தும், தேவையான நேரத்தில் குறைத்தும் செயல்படுகிறது கற்றாழை. அதன் புதுப்பிக்கும் தன்மையைப் பற்றியும் நிறைய பார்த்துவிட்டோம். அது சருமத்தை புதுப்பித்து ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் செயல்பாடுகளை பற்றியும் நமக்கு தெரியும். ஆனால் மொத்தத்தில் உங்கள் சருமத்தை இளமையாக மாற்றும் கத்தாழை.

மலச்சிக்கல் கற்றாழையில் உள்ள இயற்கையான நார்ச்சத்துக்கள், மலச்சிக்கலை நீக்கி செரிமான அமைப்பை சீராக்கும். ஏற்கனவே சொன்னதை போல், செரிமான அமைப்பை சீராக்க கற்றாழை பெரிதும் துணை புரிகிறது. ஆனால் அதோடு மட்டும் நின்று விடுவதில்லை. அதிலுள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலுக்கும் உதவி புரியும். மேலும் இது மலச்சிக்கல் ஏற்படும் போது, அதனால் உண்டாக்கும் எரிச்சலையும் நீக்கும்.

செரிமான பிரச்சனை 

செரிமானத்திற்கு தேவையான பல நொதிகள் கற்றாழையில் அதிகம் அடங்கியுள்ளது. கற்றாழை ஒரு மலமிளக்கியாக வேலை செய்வதால், அது உணவை உடைத்து, செரிமான பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.

நுண்ணுயிர் எதிர்ப்பு குணம் 

பாக்டீரியா, தொற்று, பூஞ்சை மற்றும் ஈஸ்ட் போன்றவைகளுக்கு எதிரான நுண்ணுயிர் எதிர்ப்பு குணம் கற்றாழையில் உள்ளது. நம் உடலின் உட்புறமும் சரி, வெளிப்புறமும் சரி, பல நுண்ணுயிர்களுக்கு எதிராக கற்றாழை போராடும். சொல்லப்போனால் இது அதன் மருத்துவ முக்கியத்துவத்திற்காக கொண்டாடப்பட வேண்டிய செடி. இதனை இன்றே குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மாற்றுங்கள்.

One stone in two mango....

ஒரு அழகான சாஃப்ட்வேர்
எஞ்ஜினியரும், அவனது ப்ராஜக்ட்
மேனேஜரும் ஊட்டிக்கு ரயிலில்
சென்று கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு எதிரில் ஒரு அழகான
பெண்ணும், அவளது பாட்டியும்
அமர்ந்திருந்தனர்.
கொஞ்ச நேரத்திலேயே நமது
எஞ்ஜினியருக்கும், அந்த
யுவதிக்கும் இடையில் பார்வை
பரிமாற்றங்கள் தொடங்கியது.
சிறிது நேரத்தில் ரயில் ஒரு
குகைப் பாதையில் நுழைந்தது.
உள்ளே மையிருட்டு. அப்பொழுது
ஒரு முத்தமிடும் சத்தம் கேட்டது.
தொடர்ந்து ஒரு அறை விழும்
சத்தமும் கேட்டது.ரயில் சிறிது
நேரத்தில் குகைப்
பாதையிலிருந்து வெளி வந்த
பொழுது, நால்வரும்
அவரவரிடத்தில் அமைதியாக
அமர்ந்திருந்தனர்.
பாட்டி மனதிற்குள் நினைத்தார்,
“அந்த பையனுக்கு ஆனாலும்
ரொம்ப திமிரு.என் பேத்திக்கு
முத்தம் கொடுக்கிறானே படவா!
ஆனாலும் என் பேத்தி
பரவாயில்லை. உடனே அவனை
அறைஞ்சுட்டாள்.
”ப்ராஜக்ட் மேனேஜர் மனதிற்குள்,
“இந்த பயலுக்கு இப்படி முத்தம்
கொடுக்கற அளவுக்கு தைரியம்
இருக்கும்னு தோனலையே!!
ஆனாலும் அதற்காக அந்த பெண்
என்னை அறைஞ்சிருக்க வேண்டாம்!!!
”அந்த பெண், “அந்த பையன் முத்தம்
கொடுத்தத நினைச்சா சந்தோஷமா
இருக்கு. அனா பாவம்! நம்ம பாட்டி
அவனை அறைஞ்சுட்டாங்களே!!
”நம்ம எஞ்ஜினியர் என்ன நினைச்சான்
தெரியுமா?
“வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு
நிமிஷம் ஒருத்தனுக்கு
கிடைக்கறதுக்கு கொடுத்து
வச்சிருக்கனுமே. பின்னே
சும்மாவா? ஒரே நேரத்துல ஒரு
அழகான பெண்ணுக்கு முத்தம்
கொடுத்துவிட்டு, தன்னொட
ப்ராஜக்ட் மேனேஜரை அறையும்
வாய்ப்பும் கிடைக்குமா என்ன?”

உங்கள் பெயரின் முதல் எழுத்து உங்களை அடையாளம் காட்டுகிறதா? படித்துத்தான் பாருங்களேன். !

உங்கள் பெயரின் முதல் எழுத்து உங்களை அடையாளம் காட்டுகிறதா? படித்துத்தான் பாருங்களேன். !

a

உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.

b

உங்கள் பெயர் B என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உணர்சிபூர்வமானவர்களாக இருப்பீர்கள். நீங்கள் தைரியசாலியாகவும், அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள். உங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வீர்கள். உங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்ச வேண்டும் என நினைப்பீர்கள். அதே போல் உங்கள் துணையை எப்படி கொஞ்சுவது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

c

உங்கள் பெயர் C என்ற எழுத்தில் தொடங்கினால், பல்துறை அறிவு வாய்ந்த, தகுதி வாய்ந்த, திறமைசாலியாக இருப்பீர்கள். மென்மையானவராக இருந்தாலும், பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள். இயற்கை மற்றும் பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலுடன் விளங்குவீர்கள்.

d

உங்கள் பெயர் D என்ற எழுத்தில் தொடங்கினால், அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள். தொழில் புரிய பிறந்தவர் நீங்கள். சுத்தத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். நம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டிருப்பீர்கள்.

e

உங்கள் பெயர் E என்ற எழுத்தில் தொடங்கினால், பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள். மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள். காந்த பெர்சனாலிட்டியை கொண்டவரான நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள். காதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை.

f

உங்கள் பெயர் F என்ற எழுத்தில் தொடங்கினால், திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள். பிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். நன்னம்பிக்கையாளரான நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுடன் விளங்குவீர்கள்.

g

உங்கள் பெயர் G என்ற எழுத்தில் தொடங்கினால், நோக்கத்துடனான நபராக இருப்பீர்கள் நீங்கள். புதுமை, இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள். வரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள். மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள். உங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள். உங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.

h

உங்கள் பெயர் H என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள். புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து. சுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள்.

i

உங்கள் பெயர் I என்ற எழுத்தில் தொடங்கினால், நல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள். மேலும் தைரியசாலியாக திகழ்வீர்கள். அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள். ஃபேஷன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்.

j

J என்ற எழுத்து மிகப்பெரிய லட்சியத்தை குறிக்கும். உங்கள் பெயர் J என்ற எழுத்தில் தொடங்கினால், உங்களுக்கு தேவையானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள். உங்களுக்கு ஏற்ற வகையிலான அல்லது உங்களை விட ஒசத்தியான ஒரு வாழ்க்கை துணையை தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.

k

உங்கள் பெயர் K என்ற எழுத்தில் தொடங்கினால், ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள். நீங்கள் திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும், பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்குவீர்கள். வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். நீங்கள் விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள்.

l

உங்கள் பெயர் I என்ற எழுத்தில் தொடங்கினால், வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள். அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள். தொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில்/வேலை அமையும்.

m

M என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும். உண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள். அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும். உறவுமுறையில் ஈடுபடும் போது, தன்னை முழுவதுமாக அதில் அர்பணித்துக் கொள்வார்கள்.

n

N என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும். துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.

o

அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்கள் பெயர் O என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ வருவீர்கள். ஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் எது நல்லதோ, அதன் பக்கமே நிற்பீர்கள். உங்கள் துணையிடமும் அதே குணங்களை தான் எதிர்ப்பார்ப்பீர்கள்.

p

உங்கள் பெயர் P என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராக, புதுமை மிக்கவராக இருப்பீர்கள். படபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பத— தெரியும். உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், நல்ல அழகான துணையை தான் தேடுவீர்கள்.

q

Q என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருப்பீர்கள். பலரும் நாடக ஆசிரியர்களாகவும், இசையமைப்பாளாராகவும், நடிகர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும். அவர்களுக்கு தனித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும். ட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக உருவாக்குவார்கள்.

r

உங்கள் பெயர் R என்ற எழுத்தில் தொடங்கினால், உண்மையான, கருணையான மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள். அமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள், உங்களுக்கேற்ற நல்ல துணையை தேடுவீர்கள்.

s

S என்பது கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள். நேர்மையாக, மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது. சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.

t

உங்கள் பெயர் T என்ற எழுத்தில் தொடங்கினால், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில நேரம் அளவு கடந்த சுறுசுறுப்பால் உங்களால் உறவுகளை பராமரிக்க முடியாது. உங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் மன வலி உண்டாகும். மனதளவில் திடமானவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

u

உங்கள் பெயர் U என்ற எழுத்தில் தொடங்கினால், அறிவுமிக்க தனித்துவமான இந்த நபர்கள் சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள். எதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவார்கள். அதனால் இவர்களுடன் வாழ்வது சற்று கடினமாக விளங்கும்.

v

உங்கள் பெயர் V என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள். உண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள். ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பீர்கள். இருப்பினும் காதல் என்று வந்து விட்டால், மிகவும் பொஸசிவ் குணம் உடையவாராக இருப்பீர்கள்.

w

உங்கள் பெயர் W என்ற எழுத்தில் தொடங்கினால், கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள். ஃபேஷனுடன், பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள். அவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும். வாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். மனதில் பட்டதை பேசும் அவர்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.

x

உங்கள் பெயர் X என்ற எழுத்தில் தொடங்கினால், சொகுசை விரும்பும் உங்களை சுலபமாக வழி நடத்தலாம். ஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள். இயற்கையாகவே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக வலிவீர்கள்.

y

சுதந்திரத்தை குறிக்கும் Y என்ற எழுத்து. Y என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள். எந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள். செயல்திட்ட முன்னேற்றமுடைய யோசிப்பாளரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள். சுத்தரிக்கப்பட்ட இவர்கள், வாழ்க்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வார்கள்.

z

உங்கள் பெயர் Z என்ற எழ தொடங்கினால், இந்த எழுத்தை உடையip பெயரை பார்ப்பது அரிது. இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். இவர்கள் ஒரு சிறந்த கவுன்செலராக இருப்பார்கள். 

Tamizharkal.....



தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.அதெப்படி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது வரும் என்ற சந்தேகம் பல காலமாக எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது.பணம் சம்பாதிக்கும் வேகத்தில் அவ்வப்போது இந்த நினைவுகள் நினைவுக்கு வரும்;அதோடு சரி! ஆனால் இன்று அதற்கான ஆதாரங்கள் கிடைத்துவிட்டன.ஆஹா! சிவபூமிதான் நாம் வாழும் பூமி என்று தெரிந்ததும் இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியும்,பெருமையும் கொள்கிறேன்.ஆன்மீகக்கடல் பெருமைப் படுகிறது.

இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர் இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.
குவைப்பதி மலிந்த கோவே போற்றி! (திருவாசகம்)
குவைத் போன்ற அரபுநாடுகளில் இருந்த எண்ணற்ற சிவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.இராமேஸ்வரம் போன்ற திருக்கோயிலைப் போன்ற அமைப்பு உடைய மக்கீஸ்வரம் என்ற சிவாலயம் இடிக்கப்பட்டு மக்கா என்ற மசூதியாக்கப்பட்டது.இன்றும் மக்கா மசூதியில் ஏழு அடி உயரம் உள்ள லிங்கத்தைக் காணலாம்.மக்கீஸ்வரரான லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று கூறி முகம்மதியர்கள் கல்லெறிகின்றனர்.(பக்கம் 282,283)

தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி,இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி.இந்த சிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)

இலங்கைக்கு தெற்கே கன்னி,குமரி,காவிரி என்று ஒன்பது நதிகளும்,ஏழு மலைகளும் கொண்ட மகேந்திரமலை என்ற திருத்தலத்தில் வேதங்களும்,ஆகமங்களும் தோன்றி வளர்ந்து சிவமணம் கமழ்ந்து இருந்தது.ஈசன் அருளிச்செய்த புண்ணிய வேத ஆகமங்கள் தோன்றிய தென்னகம் உலகிலேயே மிகவும் புனிதமான திசை என்று வடநாட்டுக்கு வந்து தமிழ்த்தொண்டு புரிந்த திருமூலர் போற்றியுள்ளார்.
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுன்
பேறான வேத ஆகமமே பிறத்தலால்
மாறாத தென் திசை வையகம் சுத்தமே (திருமந்திரம்)

மன்னு மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் (திருவாசகம்)
என்று தெய்வத் திருமுறைகள் தென்னாட்டு வேதங்களையும் ஆகமங்களையும் போற்றுகின்றன.திருக்கேதீஸ்வரம்,திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம் 351)

ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்புராணங்கள் தெரிவிக்கின்றன. ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.

படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,வாழ்க்கையையும்,பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).
வட அமெரிக்காவில் கொலராடா என்ற ஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது.இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

அயனீச்வரம் என்ற சிவலாயத்தைச் சுற்றி உருவான நகரமே பிற்காலத்தில் அயர்லாந்தாக மாறியது.கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.எல்சடை என்றால் கரிய சடையுடையவன் என்று பொருள்

சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.ஜப்பானில் சந்திகளிலும் சதுக்கங்களிலும் சிவாலயங்களை நிர்மாணித்து வழிபட்டு வந்துள்ளனர். போர்னியா நாட்டுக்குகைகளிலிருந்து ஈசன் திரு உருவங்கள்கண்டெடுக்கப்பட்டுள்ளன.சுமத்திராவில் பெரிய அளவிலான லிங்கப்பரம்பொருளும் அர்த்தநாரீஸ்வர வடிவமும் கிடைத்துள்ளது.ஹர என்ற வடமொழிச்சொல்லும் அப்பா என்ற தமிழ்ச்சொல்லும் சேர்ந்து ஹரப்பா என்றாயிற்று.தென் இந்திய இசையின் ஒரு ராகப்பெயர் கனடா.இந்தப் பெயரில் ஒரு வல்லரசு நாடு இருப்பதை நாம் அறிவோம்;அமெரிக்காவிலுள்ள உருகுவே என்ற ஊரின் பெயர் ஒரு தமிழ்ச்சொல்.ஈரான் என்பது இரட்டைப்பசு என்று பொருள் தரும் தமிழ்ச்சொல்.ஈராக் என்பதற்கு இரட்டையுடல் என்ற தமிழ் அர்த்தம் உண்டு.பஞ்சாக்கை என்ற சிவத்தலத்தை அப்பர் தேவாரம் போற்றியுள்ளது.பஞ்சாக்கை என்பது இன்றைய பஞ்சாப் ஆகும்.சூரிநாம்,சகாரா,ருமேனியா,யமன்(ஏமன்),மங்கோலியா ஆகியவையெல்லாம் ஆரிய மொழிச்சொற்களாகும்.பிள்ளைப்பண் என்பதே பிலிப்பைன்ஸ் ஆனது;ஓமன் என்பது ஓங்காரேஸ்வரனைக் குறிக்கும்;ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஜலால்கோட்,பாகிஸ்தானில் இருக்கும் ஜெயில் கோட் ஆகிய பெயர்களில் கோட்டை என்ற தமிழ்ச்சொல் உள்ளது.

பாரதப்பெயர்கள் எல்லாம் மூல உச்சரிப்பே தெரியாத வகையில் சிதைத்து வழங்கப்படுவது இன்றும் இயல்பு.தூத்துக்குடி,கோழிக்கோடு போன்றவையெல்லாம் டூட்டிகுரின்,காலிகட் என்றெல்லாம் மாற்றப்படுவழங்கப்படுவது போல,மேற்கூறியவைகளும் மாறியுள்ளன.ஆப்கானிஸ்தானின் பழைய பெயர் காந்தாரம்.இன்றும் இதிலுள்ள ஸ்தானம் என்பது சமஸ்க்ருதப் பெயர்.காந்தார நாட்டு இளவரசியே காந்தாரி.காந்தாரம்,பியந்தைக் காந்தாரம்,காந்தார பஞ்சமம் ஆகியவையெல்லாம் தேவாரத் திருமுறைப் பண்களின் /ராகங்களின் பெயர்களாகும்.ப்ரம்மதேசம் என்பதே இன்றைய பர்மா.அகஸ்தீஸ்வரம் என்பதே இன்றைய ஆஸ்திரேலியா.திருச்செந்தூருக்கும் இலங்கைக்கும் இடையே முழுகிப்போன தலமே கந்தமாதனம் ஆகும்

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
===============================
பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம் !!! புரட்சி கரமான திருமணம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் ஒரு முன்னணி நகரில்
நாடு ரோட்டில் தாலி இல்லாமல், மந்திரம் ஓதாமல், சம்ப்ருதாயங்கள் இல்லாமல் நடத்தினர். என் தாய் தமிழ் நாட்டில் நடந்த இந்த கூத்தைபார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா என தெரியவில்லை. தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மைபொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன்இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும். பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பாட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும். திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மனப்பென்னிற்கும்மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர். இதை சில நாடுகளும்தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல்காரணங்களுக்காகவே. தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலிதங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா ? மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில்வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை. கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவுஇடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும். மேலும் கோபுரகலசங்களும் இடி தாங்கியாகவே செயல் பட்டு வருகின்றன. பிறகு ஏன் இடி தாக்குகின்றது என கேட்கின்றீர்களா ? முறையான பராமரிப்புஅற்ற காரனங்களுக்ககவே
அவ்வப்பொழுது அப்படி நடக்கின்றது. முழுமையான ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்கள் இருக்கும் சில குறிப்பிட்ட
பகுதிகளில், சுற்று வட்டார பகுதிகளில் இடி தாகும் அபாயம் இல்லை. சும்மாவா சொன்னாரு பாரதியார் கோவில் இல்லாத
ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று ? இவை எதுவும் தெரியாமல் பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டு தானும் நாசமாவதுடன் மற்றவர்களையும் கெடுக்கின்றனர்

Thursday, September 10, 2015

பழங்களின் மருத்துவ குணங்கள்.. Fruits medicine...

பழங்களின் மருத்துவ குணங்கள்:
******************************************

மாம்பழம்:
""""""""""""""""""
மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

கொய்யா பழம்:
""""""""""""""""""""""""""""
சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

பப்பாளி:
""""""""""""""""
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

அன்னாசி:
""""""""""""""""""""
அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

விளாம்பழம்:
""""""""""""""""""""""""
விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

மாதுளம் பழம்:
"""""""""""""""""""""""""""
மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

வாழைப்பழம்:
""""""""""""""""""""""""""
மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.  எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும். ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் …ஏ† உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் …ஏ† உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.

ஆரஞ்சுப்பழம்:
"""""""""""""""""""""""""""
ஆரஞ்சில் வைட்டமின் …ஏ அதிகமாகவும், வைட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

திராட்சைப் பழம்:
""""""""""""""""""""""""""""""""
எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். இருமல் நின்று விடும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும். தலைவலி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது. தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாதியை கொட்டிய இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும். எலுமிச்சம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகரிப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவு கள் வராது.

பேரீச்சம்பழம்:
"""""""""""""""""""""""""""
தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

எலுமிச்சம்பழம்:
""""""""""""""""""""""""""""""
அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

பழங்களைப் போலவே காய்கறி களும் மனிதர்களுக்கு உடல்நலக் கோளாறுகளை தனிக்கும் வகையில்தான் உள்ளது. நோய்களை முழுது மாக குணப்படுத்து கிறதோ இல்லையோ ஆனால் நோய்வரா மல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது. நமது முன்னோர்களும், சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும். காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. உடனே நீங்கள் இந்த நோய்க்கு இந்த காயை சாப்பிட்டால் இந்தக் குறிப்பிட்ட நோய் குணமாகிவிடுமா என்று கேள்வி கேட்கக் கூடாது.

பொதுவாக காய்கறிகளில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கிய முடன் வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. காய் கறிகளில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது. இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

நாசமாக்கிய நாகரீகம் !!!!!! The village life..

நாசமாக்கிய நாகரீகம் !!!!!!

மண் வெட்டிய மண்வெட்டிகளும் இல்லை
உழுது உண்ட கலைப்பைகளும் இல்லை

வெட்டுமண் சுமந்த பின்னல் கூடைகளும் இல்லை
குடிநீர் சேகரித்த குளங்களும் இல்லை

கால்கிலோ தங்கத்தை கடுக்கானாய் சுமந்த காதுகளும் இல்லை
கோபுரங்கள் கண்ட சிற்பங்களும் இல்லை

விடியலில் ஒலிக்கும் பாகவதர் ராகங்களும் இல்லை
குளங்களில் குளித்த கோமனங்களும் இல்லை

வெத்திலை பாக்கு பரிசங்களும் இல்லை
நல்லது கெட்டதை சொல்ல பெரியோர்களும் இல்லை

தோழிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டுகளும் இல்லை
நியாங்கள் சொன்ன பஞ்சாயத்து அரச ஆலமரங்களும் இல்லை

நல்லதையும் கெட்டதையும் கட்டிகாத்த வேட்டிகளும் சேலைகளும் இல்லை
ஆறுதலான அன்பை பகிர்ந்துகொள்ள ஆத்தாவும் ஐயாவும் இல்லை

பிள்ளைகளை இடுப்பில் சுமந்த அம்மாக்களும் இல்லை
தாய்பாலை தரமாய் கொடுத்த தாய்மையும் இல்லை

வெள்ளை எடுத்த உவர் மண்ணும் இல்லை
மங்கலங்கள் தந்த மஞ்சள் பையும் இல்லை

நெஞ்சம் குளிர பசியாற்றிய கஞ்சி கலையங்களும் இல்லை
மாராப்பு சேலை அணிந்த பாட்டிமார்களும் இல்லை

இனம் மதம் தாண்டி மாமன் மச்சான் என்று உறவு கொண்டாடிய உறவுகளும் இல்லை
ஒரு உப்பு சவுக்கார கட்டியை ஊரே தேய்த்து குளித்த ஊர்களும் இல்லை

தாவணிகள் தந்த தாரகைகளும் இல்லை

முக மஞ்சள் பூசிய மணி மகுடங்களும் இல்லை

மல்லிகைமணம் சுமந்த கூந்தல்களும் இல்லை
இடுப்பை சுற்றி சொருகிய சுருக்கு பண பைகளும் இல்லை

மாட புறாக்களும் இல்லை
குயில் பாடிய கானங்களும் இல்லை

ஏறி குளங்களில் மிதக்கும் எருமை மாடுகளும் இல்லை
புனை அடித்த யானைகளும் செக்கிழுத்த காளைகளும் இல்லை

கைகளை துண்டால் மறைத்து பேசிய சந்தை வியாபாரமும் இல்லை
தொலைபேசியின் நூறு அழைப்புகளில் நிறைவுபெறாத நெஞ்சம்

ஒரே கடிதாசியில் உள்ளம் குளிர்ந்த கடிதங்களும் இல்லை
திலகம் இட்ட நெற்றிகளும் இல்லை

தேகம் வளர்த்த ராகி திணை கம்புகளும் இல்லை
கோபுரங்கள் காட்டிய கோடி புண்ணியங்களும் இல்லை

கன்னகியாகிய பெண் சாபங்களும் இல்லை
முல்லைக்கு தேர் கொடுத்த அரசனும் இல்லை

நாலு ஊரு தாண்டி அதிகாலை ஒலிக்கும் வாங்கு சப்தமும் இல்லை
முந்தானை முடிச்சுகளும் இல்லை......

நமக்குள் முன்னேற்றம் என்ற பெயரில்

நம்மை நாசமாக்கிய நமது நாகரீகம் ....

The monkey story.....


ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது.
அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.
அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது.
சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.
சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை.
இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது.
இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது.
இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது.
சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.
உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது.
அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது.
குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார்.
நீ என் முதுகில் ஏறி கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.
இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா?

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு,
"இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது.
இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.
இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எரிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.
---
நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம்,
அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள்.
"கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்"....

Wednesday, September 9, 2015

வாழைப்பழம் vaazhai yin nanmaikal useful.....

வாழைப்பழம் 
வாழைப்பழம் சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதன் முதலாக கடித்து சாப்பிடும் பழம் இந்த வாழைப்பழமாகத்தான் இருக்கும். தமிழர்கள் வகுத்த முக்கனிகளுள் மூன்றாவது கனி இது. எந்த சுபவிழாக்களாக இருந்தாலும், அங்கே முதலிடம் பிடிப்பது வாழைப்பழம்தான்.
வாழையில் பல வகைகள் இருந்தாலும், அதன் அனைத்து பாகங்களுமே நமக்கு நிறைய பயன்களை அள்ளித் தருகின்றன.
ஹோர்மோன்களை ஊக்குவிக்கும் வாழைப்பழம் [வாழைப்பழம்
ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன.
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹோர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.
நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப்படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது.
வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக்(Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சுக்ரோஸ்(Sucrose), பிரக்டோஸ்(Fructose) மற்றும் குளுக்கோஸ்(Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும்(Fiber) கொண்டுள்ளது.
இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூளை வலிமை(Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நெஞ்செரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.
கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.
இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.
இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.
வாழை இலை பயன்கள்:
* வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
* தளிரான வாழை இலையை நெருப்பினால் ஏற்பட்ட புண், வெந்நீர் பட்டதால் உண்டான புண் ஆகியவற்றில் வைத்துக் கட்ட அந்த புண்கள் உலர்ந்து விடும். அப்போது, முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.
* புண்களுக்கு துணியில் எண்ணெய் நனைத்து வைத்து கட்டும்போது, அதன் மேல் வாழை இலையையும் வைத்து கட்டி வர, அந்த துணி எண்ணெய் தன்மையுடனேயே இருக்கும். அதனால் புண் விரைவில் ஆறிவிடும்.
வாழைப்பூ பயன்கள்:
* வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும்.
* கை, கால் எரிச்சலுக்கு வாழைப்பூவை இடித்து, அதில் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் ஒற்றடமிட்டு கட்டலாம்.
* இதன் பூவை இடித்து சாறு பிழிந்து, அதில் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல், பெரும்பாடு, வயிற்றுக்கடுப்பு போன்றவை நீங்கும்.
* வாழைப்பூ சாற்றுடன் கடுக்காய் பொடி சேர்த்து குடிக்க மூல நோய் குணமாகும்.
* வாழைப்பூவின் நரம்பை நீக்கிவிட்டு, அதை ஒரு பாத்திரத்தில் இட்டு அவித்து, பின்னர் சாறு பிழிந்து, அந்த சாற்றை குடிக்க சீதபேதி, கழிச்சல் போன்றவை குணமாகும்.
* வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் இருந்தாலும் தீரும்.
வாழைத்தண்டு பயன்கள்:
* வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.
* வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறி விடும்.
* வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.
* இதன் தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவடையும்.
* வாழைப்பட்டையை தீயில் வாட்டி சாறு பிழிந்து, அதில் ஓரிரு துளி காதில் விட காது வலி நீங்கும்.
வாழை பிஞ்சு-காயின் பயன்கள் :
* வாழை பிஞ்சினால் ரத்த மூலம், ரத்த கடுப்பு, வயிற்றுப்புண், நீரிழிவு நோய் ஆகியவை குணமாகும்.
* வாழைக்காயினால் கழிச்சல், உமிழ்நீர் அதிகம் சுரத்தல், வயிறுளைச்சல், உடல் வெப்பம், இருமல் ஆகியவை தணியும். உடலில் ரத்தப் பெருக்கையும், வன்மையையும் இது உண்டாக்கும்.
வாழைப்பழம் பயன்கள் :
* வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன. உணவை எளிதில் சீரணிக்க செய்யும் வாழைப்பழம் பித்தத்தை நீக்கக்கூடியதும் கூட. மேலும், உடலில் ரத்தத்தை அதிகரிக்கவும் செய்யும்.
* தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
* பெண்கள் அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மாதவிலக்கு சீராக வரும்.
* அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண்கள் வராது. இருந்தால் ஆறிவிடும். மேலும், தோல் பளபளக்கும்.
* வாழைப்பழத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட பெரும்பாடு குணமாகும்.
* வாழைப்பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும்.
* வாழைப்பழம் அடிக்கடி சாப்பிடுவது அறிவை விருத்தியடையச் செய்யும்.
செவ்வாழை குருதியை அதிகரிக்கும். மலை வாழைப்பழம் மலச்சிக்கலை போக்கும். பேயன் வாழைப்பழம் அம்மை நோயை குணமாக்கும். பச்சை வாழை உடம்புக்கு குளிர்ச்சி தரும். நேந்திரம் பழம் சருமத்தை பளபளப்பாக்கும். மொந்தன் வாழை உடல் வறட்சியை போக்கும். நாட்டு வாழைப்பழம் குடல் புண்ணை ஆற்றும்.
வாழைப்பழ ஜூஸ்
 வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண்ணை சரிசெய்யலாம். மேலும் வாழைப்பழத்தை சாப்பிட்டால், சளி மற்றும் இருமலில் இருந்து விலகி இருக்கலாம்.