Friday, September 4, 2015

Don't waste Your Food...

ஒரு பள்ளி சிறுவன் உணவு இடைவேளை விடும்போது தன நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான்.மற்ற சிறுவர்கள் பேசிக்கொண்டும் தமக்குள்ள சண்டை போட்டுக்கொண்டும் உணவை கீழே இறைத்து கொண்டும் சாப்பிட்டர்கள்.
அவர்கள் அதை பற்றி பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் இந்த சிறுவன் அமைதியாக ஒரு பருக்கை கூட கீழே சிந்தாமல் கவனமாக சாப்பிட்டான். ஒன்றிரண்டு சோற்று பருக்கை டிபன் தூக்கில் ஒட்டி கொண்டு இருந்தாலும் அதையும் எடுத்து சாப்பிட்டுவது அவன் பழக்கம்.
இதை பார்த்த அவன் நண்பர்கள் அவனை "பிச்சைகாரன்" என்று கேலி செய்தனர். அவன் அதற்காக கவலைப்படவில்லை. இதை கூர்ந்து கவனீத்த அவன் நண்பனொருவன் ஒருநாள் இதை பற்றி கேட்ட பொழுது அந்த சிறுவன் அதற்கு பின் வருமாறு விளக்கம் கொடுத்தான்.
"இதோ பார் நண்பா ..நான் ஒரு பருக்கை கூட வீணாகாமல் சாபிடுவது என் பெற்றோர்களுக்கு நான் காட்டும் மரியாதை. என் அன்னை அதிகாலையில் எழுந்து குளிர் பனி என்று பாராமல் எனக்கு பிடித் உணவை அன்புடன் செய்து கொடுத்து என்னை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறாள். என் தந்தை இரவு பகல் என்று பாராமல் வெளியே உழைது வீட்டை நடத்தி செல்ல பொருள் ஈட்டி கொண்டு வருகின்றார்.
அது மட்டும் அல்ல . நாம் கீழே சிந்தி வீணாக்கும் ஒவ்வோர் பருக்கையும் நம் தாய் தந்தையரோடு மழை வெயில் பாராது தன நெற்றி வேர்வை நிலத்தில் விழ பாடுபடும் விவசாயிகளையும் அவமதிப்பதாகும். உலகில் எவ்வளவோ பேர்கள் உண்ண உணவில்லாது அவதிபடுகிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நான் சிறிது கூட சிந்தாமல் வீணாகாமல் சாப்பிடுகிறேன் " என்று பதில் அளித்தான்.
நாம் எல்லோரும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம்தான்.

No comments: