ஒரு பெண்மணி செல்லப் பிராணிகள் விற்கும் கடையில், மிகவும் அழகான கிளி ஒன்றைப் பார்த்தாள். அதன் விலை வெறும் 50 ரூபாய் என்று எழுதியிருந்தது.!
"ஏன் இவ்வளவு குறைவான விலை, இத்தனை அழகான கிளிக்கு?"
"அது ஒண்ணுமில்லைம்மா, இந்தக்கிளி முன்னாடி ஒரு விபச்சார விடுதியில இருந்துது. சமயத்துல ரொம்ப கெட்ட கெட்ட வார்த்தையாப் பேசிடுது.” என்றாள் அந்தக் கடை உரிமையாளர்.
சற்று யோசித்த அந்தப் பெண்மணி, கிளியை விட மனமில்லாமல், வாங்கி, வீட்டுக்குக் கொண்டு சென்று, ஹாலில், கிளிக்கூண்டை தொங்கவிட்டு,....
... எதாவது பேசுமா என்று பார்த்தாள்.
அந்தக் கிளி நிதானமாக அந்த ஹாலை சுற்றிப் பார்த்துவிட்டு,...
"புது வீடு,... புது மேடம்!" என்றது!
கிளி என்ன அர்த்தத்தில் சொல்கிறது என்று புரிந்தாலும்,...
"இது ஒண்ணும் கெட்ட வார்த்தையில்லையே!" என்று சமாதானமானாள்.
அப்போது அங்கு வந்த அந்தப்பெண்மணியின் இரண்டு டீன் ஏஜ் மகள்களைப் பார்த்து,...
"புது வீடு,... புது மேடம்,... புதுப் பொண்ணுங்க!!" என்றது கிளி !
தர்மசங்கடத்திலும், அந்த கிளி முன்பு இருந்த இடத்தை நினைத்து, மூவரும் வாய்விட்டு சிரித்தனர்.
சிறிது நேரம் கழித்து, அந்தப்பெண்மணியின் கணவர் சேகர், உள்ளே நுழைந்தார்.
கிளி அவரைப்பார்த்து,... "ஹாய் சேகர்" என்றது!
செத்தாண்டா சேகரு!!!!
😜😜😜😜😝😝😝😝😂😂😂😂😂😂
No comments:
Post a Comment