Saturday, September 5, 2015

The happy life....

இல்லத்தில்...அலுவலகத்தில்... பொது வாழ்வில்...
மனித உறவுகள் சீராக இருக்க          
                 A to Z 🔔

🔔APPRECIATION - மற்றவர்களின்  நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

🔔BEHAVIOR - புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச்சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாததுபோல் நடந்து கொள்ளாதீர்கள்.

🔔COMPROMISE -  அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள். நேரில்  சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

🔔DEPRESSION - மற்றவர்கள் நம்மை புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

🔔EGO - மற்றவர்களை விட உங்களையே உயர்வாய் நினைத்துக் கர்வபடாதீர்கள்.

🔔FORGIVE - கண்டிக்கக்கூடிய அதிகாரமும் , நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும் எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள். 

🔔GENUINENESS - எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தையும் நேர்மையாக கையாளுங்கள்.

🔔HONESTY - தவறு செய்தால் உடனே மன்னிப்புக் கேட்பதைக்
கௌரவமாக கருதுங்கள்.

🔔INFERIORITY COMPLEX – எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள் நான் சிறியவன் என்ற தாழ்வு மனப்பான்மையை விட்டு விடுங்கள்.

🔔JEALOUSY -  பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே  அழிக்கும்.

🔔KINDNESS -  இனிய, இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

🔔LOOSE TALK - சம்பந்தமில்லாமலும், அர்த்தமில்லாமலும், பின் அறியாமலும் பேச வேண்டாம்.

🔔MISUNDERSTANDING - மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளதீர்கள்.

🔔NEUTRAL - எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம் .பேசிவிட்டு முடிவு எடுங்கள். முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்.

🔔OVER EXPECTATION  -அளவுக்கு அதிகமாகவும், தேவைக்கு அதிகமாகவும் ஆசைப்படாதீர்கள்.

🔔PATIENCE  - சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

🔔QUIETNESS  -தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்சனைகளுக்குக்
காரணம் தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

🔔ROUGHNESS - பண்பில்லாத வார்த்தைகளையும், தேவைஇல்லாத 
மிடுக்கையும் காட்டாதீர்கள்.

🔔STUBBORNNESS - சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
                                           
🔔TWISTING  - இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை 
இங்கேயும் சொல்வதை விட்டு விடுங்கள்.
                                          
🔔UNDERESTIMATE  - மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.
                                             
🔔VOLUNTARY  -அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று 
காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கு முதலில்
காது கொடுங்கள். பின்பு அதற்கு பதில் கொடுங்கள்.
                                  
🔔WOUND  - எந்தப் பேச்சும், செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
                                          
🔔XEROX  - நம்மை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்தவேண்டும்.
                                   
🔔YIELD  - முடிந்தவரை விட்டுக்கொடுங்கள். விட்டுகொடுப்பவன்
கெட்டுப்போவதில்லை, கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை.

🔔ZERO - இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை   என்பது பூஜ்ஜியம் ஆகும்.

No comments: