=======================
ஒருவன் 2 நீச்சல் குளங்களை கட்டினான். ஒரு குளத்தில் தண்ணீர் நிரப்பாமலே விட்டான். ஏன்னு கேட்டதற்கு...
அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா என்றான்😄😁😄
-------------------------
மாடு போல சின்னதா இருக்கும்...! ஆனா அது மாடு இல்ல...!
அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி!
கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?👔💥😏
---------------------------
கோடீஸ்வரனாக ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லுங்களேன்
தெரிஞ்சா நான் ஏன்யா நீங்க கொடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு உக்காந்து ஜோசியம் பாக்கறேன்?😁😁😁😄😄😄
---------------------------
டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?😁😁😁
---------------------------
தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம்
என்னன்னு தெரியுமா...?
தெரியலையே.... என்னது?
தலையிலே முடி இருக்கிறது தான்...!😁😁😁😁
---------------------------
செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.
செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது
😂😂😂😇
---------------------------
ஏன்.... தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க தெரியுமா...!
கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடும்ல..!
😴😴😬😬😡😡
---------------------------
டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க..!
சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?
👵👵👵😄😄😄
---------------------------
ராத்திரியில சூரியன் எங்கே போகுது?...
எங்கேயும் போகல...., இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை!.
😬😬😇😇
---------------------------
கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு!
டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு!
😜😜😜
---------------------------
சோப் டப்பாலே ஏன் சின்ன சின்ன ஓட்டையா போட்டுருக்காங்க?
ஏன்னா, பெரிய ஓட்டை போட்டா சோப் கீழ விழுந்துடும்!
😜😜😜😜
---------------------------
உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?
ஓட்டுவீடு, அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... 'தங்க' வீடெல்லாம் கிடையாது.
No comments:
Post a Comment