Thursday, September 17, 2015

Don't waste your time..why read the story

அசோக மன்னர்
ஒரு விசித்திர கட்டளையைப்
பிறப்பித்தார்.""ஒரு ஆட்டுத் தலை, ஒரு
புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு
உடனே வேண்டும். ஏற்பாடு
செய்யுங்கள் அமைச்சரே,''
என்றார்.மன்னரின் கட்டளை அமைச்சரைத்
திகைக்க வைத்தது. எனினும் அரச
கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள்
நாலாபக்கமும் பறந்தனர்.
ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம்
இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது
கிடைத்து விட்டது. புலித் தலைக்கு அலைந்தனர்.
அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது.
அன்றுதான் அவன் ஒரு புலியை
வேட்டையாடியிருந்தான். மனிதத் தலைக்கு
எங்கே போவது? கடைசியில் சுடுகாட்டிற்குச்
சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக்
கொண்டு வந்து சேர்ந்தனர்மூன்ற
ையும் பார்த்த அசோக மன்னர் தன்
அமைச்சரிடம், ""இம்மூன்றையும் சந்தையில்
விற்றுப்பொருள் கொண்டு
வாருங்கள்.'' என்றார்.
மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச்
சென்றவன் திணறினான். ஆட்டுத்
தலை அதிகச் சிரமமின்றி விலை போனது. புலியின்
தலையை வாங்க ஆளில்லை. பலர் அதை
வேடிக்கைத் தான் பார்த்தனர். கடைசியில் ஒரு
வேட்டைப் பிரியரான பிரபு அதனை வாங்கித்
தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி
வைக்க எடுத்துப் போனான்.
மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம்
அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின்
வாங்கியது. ஒரு காசுக்கு கூட அதை
வாங்க யாரும் முன்வரவில்லை.
அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை
உடனே விலை போனதையும், புலித்தலை சற்றுச்
சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை
வாங்க ஆளில்லை என்பதையும்
தெரிவித்தார்.
இப்போது அசோக மன்னர் கூறினார்...
""பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர்
போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு
கூடப் பெறாது. இலவசமாகக் கூட
இதனை யாரும்
தொடமாட்டார்கள். இருந்தும்
இந்த உடம்பு உயிர் உள்ளபோது என்ன
ஆட்டம் ஆடுகிறது!

No comments: