Saturday, September 12, 2015

கற்றாழை மருத்துவ குணங்கள் ....

கற்றாழை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டையான சதைப் பற்றுள்ள இலைகளை கொண்ட ஒரு செடி தான். அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளம். அதனால் அது தலை முதல் கால் வரை பயன்படுகிறது. அது மட்டுமா என்ன, நம் உடலின் உட்புறமும் கூட பயன்படுகிறது.

பன்முக செயல்திறனைக் கொண்ட செடியாக விளங்கும் கற்றாழையை ஒரு சிறந்த வீட்டு சிகிச்சை மருந்தாக இந்தியா மட்டுமல்லாது, உலகமே ஏற்று கொண்டுள்ளது. நம் உடலின் உள்ளேயும், வெளியேயும் ஏற்பட்டுள்ள காயங்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் இதில் உள்ளதால், இதனை பலர் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது கற்றாழையால் ஏற்படும் உடல்நல பயன்களை பற்றிப் பார்ப்போமா!!!

வெட்டுக் காயங்கள்

கற்றாழையில் பாக்டீரியா எதிர்ப்பு குணங்களும், ஆன்டி-செப்டிக் குணங்களும் அதிகமாக உள்ளது. அதனால் வெட்டுக் காயங்கள், புண்கள், பூச்சிக் கடிகள் மற்றும் சிராய்ப்புகள் போன்றவற்றிற்கு இதனைப் பயன்படுத்தலாம்.

அதற்கு இந்த செடியின் உட்புறத்தில் உள்ள ஜெல் போன்ற பகுதியை காயம் பட்ட இடத்தில் தடவ வேண்டும். இது எரிச்சலை குறைத்து, பாக்டீரியாவை எதிர்த்து போராடவும் செய்யும்.

முகப்பருக்கள்

கற்றாழையின் குணப்படுத்தும் குணங்களால் பருக்களை நீக்க அதனை பயன்படுத்தலாம்.

மென்மையான சருமத்தை பெற பெண்கள் இன்னும் பல வழிகளை தேடி கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைத்த ஆர்கானிக் விடை தான் கற்றாழை. இருப்பினும் கற்றாழையை கொண்டு பருக்களை முழுமையாக நீக்க முடியாது. ஆனால் அழற்சியையும், சருமம் சிவந்திருப்பதையும் தடுக்கலாம். மேலும் பருக்கள் உடைவதையும் தடுக்கும். இருப்பினும் ஹார்மோன் சமமின்மையால் பருக்கள் ஏற்பட்டால், கண்டிப்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

சரும திசுக்களை புதுப்பிக்கும்

கற்றாழை குளிர்ச்சி ஏற்படுத்தும் செடியாக விளங்குவதால், எரிச்சல்கள் மற்றும் வெந்த புண்களுக்கு அதனை பயன்படுத்தலாம். இது சரும திசுக்களை வேகமாக சரிசெய்யும்.

இந்த அதிசய செடியில் குளிர்ச்சி ஏற்படுத்தும் குணம் உள்ளதால், அவை அணுக்களை புதுப்பிக்க உதவும். அதனால் பாதிப்படைந்த திசுக்கள் மீண்டும் சீரமைக்கப்படும்.

சரும நிற மாற்றத்தைத் தடுக்கும்

கற்றாழை சருமத்தை வெளுப்பாக்கும். அதனால் சூரிய கதிர்களால் ஏற்படும் சரும டான் மற்றும் நிறம் மாறுதல் போன்றவற்றிற்கு இதனை பயன்படுத்தலாம்.

சரும வறட்சியைத் தடுக்கும்

கற்றாழையின் ஜெல்லில் அதிகப்படியான ஈரப்பதம் அடங்கியுள்ளது. அதனால் அதனை சருமத்தில் தடவினால், சருமத்திற்கு நீர்ச்சத்து கிடைத்து, அதன் மீள்தன்மையை அதிகரிக்கும்.

கற்றாழை ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசராக விளங்கும். அதனை வீட்டிலேயே வளர்க்கவும் செய்யலாம்.

சரும சுருக்கம்

கற்றாழையின் ஜெல் சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை தடுப்பதில் சிறந்தது.

சரும நோய்கள்

கற்றாழை மிகப்பெரிய அலர்ஜி எதிர்பானாக விளங்குகிறது. அதனால் சருமத்தில் படை, சிரங்கு, அரிப்பு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

உடலினுள் ஏற்படும் அழற்சி

அழற்சிக்கு கற்றாழையை ஒரு நல்ல சிகிச்சை முறையாக பயன்படுத்தலாம். இது அசிடிட்டி, இரைப்பை அழற்சி, குடல் அல்சர் மற்றும் அழற்சிகளை குணமாக்கும்.

சரும அழற்சியை குணப்படுத்துவதை போலவே, உடலுக்குள் ஏற்பட்டுள்ள அழற்சியையும் கற்றாழை குணப்படுத்தும். செரிமான குழாய்களை அமைதிப்படுத்தும். சாப்பிட்ட பின் செரிமான அமைப்பை குளிர்ச்சியடைய வைக்க, இது ஒரு சிறந்த வழியாகும்.

நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கும்

இதில் பல வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்பாட்டில் வைத்து, நலமூக்கியாகவும், ஆன்டி-ஆக்ஸிடன்டாகவும் விளங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை தேவையான நேரத்தில் அதிகரித்தும், தேவையான நேரத்தில் குறைத்தும் செயல்படுகிறது கற்றாழை. அதன் புதுப்பிக்கும் தன்மையைப் பற்றியும் நிறைய பார்த்துவிட்டோம். அது சருமத்தை புதுப்பித்து ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் செயல்பாடுகளை பற்றியும் நமக்கு தெரியும். ஆனால் மொத்தத்தில் உங்கள் சருமத்தை இளமையாக மாற்றும் கத்தாழை.

மலச்சிக்கல் கற்றாழையில் உள்ள இயற்கையான நார்ச்சத்துக்கள், மலச்சிக்கலை நீக்கி செரிமான அமைப்பை சீராக்கும். ஏற்கனவே சொன்னதை போல், செரிமான அமைப்பை சீராக்க கற்றாழை பெரிதும் துணை புரிகிறது. ஆனால் அதோடு மட்டும் நின்று விடுவதில்லை. அதிலுள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலுக்கும் உதவி புரியும். மேலும் இது மலச்சிக்கல் ஏற்படும் போது, அதனால் உண்டாக்கும் எரிச்சலையும் நீக்கும்.

செரிமான பிரச்சனை 

செரிமானத்திற்கு தேவையான பல நொதிகள் கற்றாழையில் அதிகம் அடங்கியுள்ளது. கற்றாழை ஒரு மலமிளக்கியாக வேலை செய்வதால், அது உணவை உடைத்து, செரிமான பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.

நுண்ணுயிர் எதிர்ப்பு குணம் 

பாக்டீரியா, தொற்று, பூஞ்சை மற்றும் ஈஸ்ட் போன்றவைகளுக்கு எதிரான நுண்ணுயிர் எதிர்ப்பு குணம் கற்றாழையில் உள்ளது. நம் உடலின் உட்புறமும் சரி, வெளிப்புறமும் சரி, பல நுண்ணுயிர்களுக்கு எதிராக கற்றாழை போராடும். சொல்லப்போனால் இது அதன் மருத்துவ முக்கியத்துவத்திற்காக கொண்டாடப்பட வேண்டிய செடி. இதனை இன்றே குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மாற்றுங்கள்.

No comments: