அது அவன் மனைவி வளர்க்கும் நாய்.
ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய்,
இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில்
விட்டுவிட்டு வந்தான் குமார் . ஆச்சர்யம்..!
அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்..!!
கடுப்பான குமார்,
அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த
ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள்
வழியாக வீடு திரும்பினான். மறுபடியும் ஆச்சர்யம்… வீட்டில் நாய்..!!
மூன்றாம் நாள்…
காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன்,
காரை எங்கெங்கோ செலுத்தினான்.
வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான்.
ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான்.
இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான்.
இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு,
வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டுபுறப்பட்டான்.
வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து,
உன் நாய், வீட்டில் இருக்கிறதா..? என்று கேட்டான்.
இருக்கிறதே..! ஏன் கேட்கிறீர்கள்..? என்றாள் அவள்.
அந்த சனியன்கிட்டே போனைக் கொடு..!!
வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு.. 😆😂😆😂😆😂😆😂😆😂😆😂😆😂😆😂😆😂😆😂😂😂😂😂
No comments:
Post a Comment