Saturday, September 5, 2015

Marketing.....


நண்பர்கள்
சிலருக்கு மார்க்கெட்டிங்கை பற்றி தெரிந்திருக்கும், ஆனால் அதன் வகைகளைப்பற்றி  தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பலருக்கு மார்க்கெட்டிங் என்றால் என்னவென்றே தெரியாமலும் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த  பதிவு.

நீங்கள் ஒரு விருந்தில் அழகான, ஒரு பணக்கார பெண்ணை பார்க்கிறீர்கள். நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்”என்று கூறினால் அது Direct Marketing.

உங்கள் நண்பர்கள் அந்த பெண்ணிடம் சென்று உங்களை காண்பித்து “அவனும் பணக்காரன் தான். அவனை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினால் அது Advertising.

நீங்களே அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று அந்த பெண்ணின் தொலைப்பேசி எண்ணை வாங்கிகொண்டு, அடுத்த நாள் அந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினால் அது Tele Marketing.

அந்த அழகான பெண்ணே உங்களிடத்தில் வந்து “நீங்களும் பணக்காரன் தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்றால் அது Brand Recognition.

அந்த அழகான, பணக்கார பெண்ணிடம் சென்று நீங்கள் “நானும் பணக்காரன் தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறீர்கள். உடனே அதற்கு அந்த பெண் உங்களின் கன்னத்தில் சப்பென்று அறைந்தால்… அதுதான் Customer Feedback.

அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறியதற்கு, அந்த பெண், தனது கணவரை அறிமுகம் செய்தால் அது Demand and Supply gap.

நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று நீங்கள் பேசுவதற்கு முன்னால் வேறொரு நபர் வந்து அந்த பெண்ணிடம் “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறான். அந்த பெண்ணும் அவனுடன் சென்றுவிடுகிறாள். இது தான் Competition eating your market share.

நீங்கள் அந்த அழகான பணக்கார பெண்ணிடம் சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்று கூறுவதற்கு முன்பே உங்களின் மனைவி அருகில் வந்தால் Restriction for entering new markets.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே Marketing Concepts என்றால் என்னவென்று…

No comments: